போலி மலேசிய காற்பந்து அணி குறித்து விசாரணை

போலி மலேசிய காற்பந்து அணி குறித்து விசாரணை

1 mins read
d9b10f02-efce-4b44-8284-0f711296113d
படம்: ராய்ட்டர்ஸ் -

போலியாக உருவாக்கப்பட்ட மலேசிய தேசிய காற்பந்து அணி, அமெரிக்காவின் எல் ஏ கேலக்சி குழுவிற்கு எதிராக விளையாடி தோல்விகண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த விவகாரம் குறித்து மலேசிய காற்பந்துச் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த ஆட்டம் எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை. எனினும், அண்மையில் மலேசிய தேசிய அணி அமெரிக்காவிற்குச் சென்று எந்த ஆட்டத்திலும் ஆடவில்லை என்று மலேசிய காற்பந்துச் சங்கம் உறுதிப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம்

கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெறவில்லை என்பதை சங்கத்தின் பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் அதிர்ச்சியுடன் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

போலி குழு இடம்பெற்றதாகச் சொல்லப்படும் அந்த ஆட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் எல்ஏ கேலக்சி வெற்றிகண்டது.