போலி மலேசிய காற்பந்து அணி குறித்து விசாரணை

போலி மலேசிய காற்பந்து அணி குறித்து விசாரணை

1 mins read

கோலா­லம்­பூர்: போலி­யாக உரு­வாக்­கப்­பட்ட மலே­சிய தேசிய காற்­பந்து அணி, அமெ­ரிக்­கா­வின் எல் ஏ கேலக்சி குழு­விற்கு எதி­ராக விளை­யாடி தோல்­வி­கண்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. அந்த விவ­கா­ரம் குறித்து மலே­சிய காற்­பந்­துச் சங்­கம் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

அந்த ஆட்­டம் எப்­போது நடை­பெற்­றது என்­பது தெரி­ய­வில்லை. எனி­னும், அண்­மை­யில் மலே­சிய தேசிய அணி அமெ­ரிக்­கா­விற்­குச் சென்று எந்த ஆட்­டத்­தி­லும் ஆட­வில்லை என்று மலே­சிய காற்­பந்துச் சங்­கம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

இப்­ப­டிப்­பட்ட ஒரு சம்­ப­வம் கடந்த 10 ஆண்­டு­க­ளாக இடம்­பெ­ற­வில்லை என்­பதை சங்­கத்­தின் பொதுச் செய­லா­ளர் நுர் அஸ்­மான் ரஹ்­மான் அதிர்ச்­சி­யு­டன் நியூ ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார். போலி அணி இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­படும் அந்த ஆட்­டத்­தில் எல்ஏ கேலக்சி வெற்றி­கண்­டது.