'தென்கொரியா புதிய வரலாறு படைக்கவேண்டும்'

'தென்கொரியா புதிய வரலாறு படைக்கவேண்டும்'

1 mins read
3ec11bcd-714c-4199-a50f-50a74109c9a7
தென்கொரியாவின் சொன் ஹியோங் மின். படம்: ஏஎஃப்பி -

சோல்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­களில் ஆகச் சிறப்­பாகச் செய்­துள்ள ஆசிய அணி தென்­கொ­ரியா. 2002ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் சொந்த மண்­ணில் தென்­கொ­ரியா அரை­யி­று­திச் சுற்று­வ­ரைச் சென்­றது. அதி­லும் அப்­போட்­டி­யில் இத்­தா­லிக்கு எதி­ரான இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தின் கூடு­தல் நேரத்­தில் தென்­கொ­ரி­யா­வின் ஆன் ஜுன்-ஹுவாங் வெற்றி கோலைப் போட்­டது ரசி­கர்­க­ளின் மனத்­தில் நீங்கா இடம்­பி­டித்­தது.

தென்­கொ­ரியா என்­றாலே 2002ஆம் ஆண்­டுப் போட்டி­தான் நினை­வுக்கு வரும்.

எனி­னும், அந்­நி­கழ்வை நினைவு­கூ­ரா­மல் புதி­ய­தொரு வர­லாற்­றைப் படைக்­கு­மாறு தென்­கொ­ரிய அணி­யைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார் அதன் முன்­னாள் நட்­சத்­தி­ரம் கூ ஜா-சியோல்.

"மக்­க­ளுக்கு அது மிகச் சிறந்த அனு­ப­வம்­தான். எனி­னும், விளை­யாட்­டா­ளர்­க­ளைப் பொறுத்­த­வரை அந்த சாதனை நெருக்­கு­தல் அளிக்­கிறது என்­பது எனது கருத்து," என்­றார் 2014ஆம் ஆண்­டுப் போட்டி­யில் தென்­கொ­ரி­யா­வின் அணித்­தலை­வ­ராகவும் இருந்த கூ.

2010ஆம் ஆண்­டுப் போட்­டிக்­குப் பிறகு தென்­கொ­ரியா முதல் சுற்­றைத் தாண்­ட­வில்லை. அப்­போட்டி­யில் தென்­கொ­ரியா இரண்­டாம் சுற்­று­வரை முன்­னேறி உருகு­வே­யி­டம் தோல்­வி­ய­டைந்­தது.

எனி­னும், சென்ற போட்­டி­யில் நடப்பு வெற்­றி­யா­ளர்­கள் ஜெர்­மனியை வென்று அந்த அணியை முதல் சுற்­றி­லேயே வெளி­யேற்­றிய பெருமை தென்­கொ­ரி­யா­வுக்கு உண்டு.

'2002 உலகக் கிண்ணப் போட்டியைப் பற்றி நினைக்கவேண்டாம்'