'எதிர்த்தால் ரொனால்டோமீது வழக்கு தொடரப்படலாம்'

'எதிர்த்தால் ரொனால்டோமீது வழக்கு தொடரப்படலாம்'

1 mins read

மான்­செஸ்­டர்: காற்­பந்து நட்­சத்­திரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­விற்கு எதி­ராக வழக்­குத் தொடர அவர் விளை­யா­டும் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் யுனை­டெட்­டிற்கு எண்­ணம் இல்லை; எனி­னும், குழு­வி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டும்­போது அதை எதிர்க்­கும் முயற்­சி­களில் அவர் ஈடுபட்டால் சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­லாம் என்று யுனை­டெட் எச்­ச­ரித்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய கருத்­து­களை ரொனால்டோ நேர்­கா­ணல் ஒன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார். யுனைெடட் நிர்­வாகி எரிக் டென் ஹாக் உள்­ளிட்­டோ­ரைக் கடு­மை­யா­கத் தாக்­கிப் பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக யுனை­டெட் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. 37 வயது ரொனால்டோ யுனை­டெட்­டில் விளை­யாட வகை­செய்­யும் ஒப்­பந்தத்தை அக்­குழு ரத்து செய்­யும் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வதா­கக் கூறப்­ப­டு­கிறது. அவ­ரின் ஒப்­பந்­தம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறை­வ­டை­ய­விருந்தது.

எனி­னும், இன்று தொடங்­க­வுள்ள உல­கக் கிண்­ணப் போட்டி நிறை­வ­டைந்த பிறகு ரொனால்டோ குழு­வில் மறு­ப­டி­யும் சேரக்­கூ­டாது என்­பது யுனை­டெட் நிர்­வா­கத்­தி­ன­ரின் முடிவு என்று தெரி­விக்­கப்­பட்­டது. சென்ற ஆண்டு மீண்­டும் யுனை­டெட்­டில் சேர்ந்த ரொனால்டோ கடந்த சில வாரங்­களாக பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.