உலகக் கிண்ண காற்பந்து போட்டி: சூடுபிடிக்கும் களம்

1 mins read
cfca028e-649b-4cd0-8b5f-78a13bc6098a
படம்: ராய்ட்டர்ஸ் -

உலகக் கிண்ண காற்பந்து போட்டி இன்னும் சில மணிநேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று பல பிரமுகர்கள் கத்தாருக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

ஐக்கிய நாட்டு அமைப்பின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ், அல்ஜீரிய, பாலஸ்தீன, எகிப்து, ருவான்டா ஆகிய நாடுகளின் அதிபர்கள் ஆகியோர் இன்று கத்தார் வந்தடைந்தனர். சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் கத்தாருக்கு வருகையளித்துள்ளார். சவூதி அரேபியாவின் முதல் ஆட்டம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும். அது அர்ஜெண்டினாவைச் சந்திக்கும்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கத்தார் மன்னருக்கு தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

போட்டியின் முதல் ஆட்டம் இன்று சிங்கப்பூர் நேரப்படி இரவு 11.55 மணிக்குத் தொடங்கும். 'ஏ' பிரிவில் கத்தார் இக்குவடோர் அணியைச் சந்திக்கும். போட்டிகளில் கத்தார் பங்கெடுப்பது இதுவே முதல்முறை.

முதல் ஆட்டம் அல் பய்த விளையாட்டரங்கில் இடம்பெறும். இந்த அரங்கத்தில் 60,000 பேர் வரை அமரும் வசதி உள்ளது. இந்த அரங்கத்தில் ஒன்பது ஆட்டங்கள் நடைபெறும்.