பெயரை மீட்க ஜெர்மனி முயற்சி

பெயரை மீட்க ஜெர்மனி முயற்சி

2 mins read
2a9c2cd8-d7a1-433e-b29a-2d67de862c77
பயிற்சியில் ஈடுபடும் ஜெர்மனி வீரர்கள். உலகக் கிண்ணத்தை இரண்டாவது ஆக அதிக முறை வென்றுள்ளது ஜெர்மனி. படம்: ஏஎஃப்பி -

தோஹா: காற்­பந்து உல­கக் கிண்­ணத்தை நான்கு முறை வென்­றுள்­ளது ஜெர்­மனி. கிண்­ணத்தை இரண்­டா­வது ஆக அதிக முறை வென்­றி­ருக்­கும் அணி இது.

எனி­னும், 2018ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் உல­கக் கிண்ண நடப்பு வெற்­றி­யா­ளர்­க­ளா­கக் கள­மி­றங்­கி­ய­போது முதல் சுற்­றி­லேயே வெளி­யே­றி­யது. அதற்­குப் பிறகு சென்ற ஆண்டு நடை­பெற்ற யூரோ 2020 போட்­டி­யி­லும் காலி­று­திச் சுற்­றைத் தாண்­டத் தவ­றி­யது.

அந்த ஏமாற்­றங்­க­ளைப் பின்­னுக்­குத் தள்ளி இந்­தப் போட்­டி­யில் இழந்த பெயரை மீட்­கும் முயற்­சி­யில் இறங்­க­வுள்­ளது ஜெர்­மனி. 2018ஆம் ஆண்டு ரஷ்­யா­வில் நடை­பெற்ற சென்ற போட்­டி­யில் ஜெர்­மனி அணி­யில் இடம்­பெற்­றோ­ரில் நால்­வர் மட்­டுமே இம்­மு­றை­யும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். புதிய வீரர்­க­ளு­டன் அணி புத்­து­யிர் பெற்­றி­ருக்­கும் என்­பது ரசி­கர்­க­ளின் நம்­பிக்கை.

அணித் தலை­வ­ரும் கோல் காப்­பா­ள­ரு­மான மேனு­வெல் நோயர், தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் தாமஸ் முல்­லர், நடுத்­தி­டல் வீரர் மாரியோ கட்ஸ, தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் மத்­தா­யஸ் கின்­டர் ஆகி­யோர் மட்­டுமே அணி­யில் மீண்­டும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர்.

'இ' பிரி­வில் தனது முதல் ஆட்­டத்­தில் ஜெர்­மனி இன்று ஜப்­பானைச் சந்­திக்­கிறது. சென்ற போட்­டி­யில் மற்­றோர் ஆசிய அணி­யான தென்­கொ­ரி­யா­தான் அதை எதிர்­பாரா வித­மா­கப் போட்­டி­யி­லிருந்து வெளி­யேற்­றி­யது. அப்­படிப்­பட்ட சூழ­லைத் தவிர்க்­க­வேண்­டும் ஜெர்­மனி.

காய­முற்­றி­ருக்­கும் ஜெர்­ம­னி­யின் லீரோய் சானே இந்த ஆட்­டத்­தில் இடம்­பெ­ற­மாட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் ஜப்­பான் இது­வரை இரண்­டாம் சுற்­றைத் தாண்­டி­ய­தில்லை. ஏழு முறை உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இடம்­பெற்­றது, மூன்று முறை இரண்­டாம் சுற்­று­வரை முன்­னே­றி­யது.

சென்ற போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றில் பெல்­ஜி­யத்தை 2-0 எனும் கோல் கணக்­கில் முன்­ன­ணி­யில் இருந்து காலி­று­திக்கு முன்­னே­றும் விளிம்­பில் இருந்­தது ஜப்பான். ஆனால் அபா­ர­மாக மீண்டு வந்து 3-2 எனும் கோல் கணக்­கில் வென்றது பெல்­ஜி­யம்.