செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

டி20 கிரிக்கெட்: இந்தியா, நியூசிலாந்து சமநிலை

நேப்பியர் (நியூசிலாந்து): இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய டி20 கிரிக்கெட் ஆட்டம் 'டிஎல்எஸ்' எனப்படும் 'டக்வொர்த் லூயிஸ் முறை'ப்படி சமநிலையில் முடிந்தது.

முதலில் பந்தடித்த நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதற்குப் பிறகு பந்தடித்த இந்தியா ஒன்பது ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை எடுத்தது.

மழையால் ஆட்டம் தாமதமடைந்ததால் 'டிஎல்எஸ்' முறைப்படி ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

கொண்டாட்ட நடனங்களை ஒத்திகை பார்க்கும் பிரேசில்

தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கோல் போட்ட பிறகு கொண்டாடுவதற்கான நடனங்களை பிரேசில் (படம்) ஒத்திகை பார்த்திருப்பதாக அதன் நட்சத்திரம் ரஃபின்யா தெரிவித்துள்ளார்.

நாளை அதன் முதல் ஆட்டத்தில் செர்பியாவைச் சந்திக்கவுள்ளது பிரேசில். அந்த 'ஜி' பிரிவு ஆட்டத்தை முன்னிட்டு அணி மிகவும் உற்சாகத்துடன் இருப்பதற்கு இது சான்று என்று கருதப்படுகிறது.