லுசாய்ல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'சி' பிரிவு ஆட்டத்தில் சவூதி அரேபியாவை அர்ஜென்டினா எளிதில் வெல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதை சற்றும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் லயனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சவூதி அரேபியா.
முற்பாதியாட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினாவை பிற்பாதியாட்டத்தில் வெல்லவேண்டும் என்ற வெறியுடன் சவூதி அரேபியா எதிர்கொண்டது. சவூதி அரேபியாவின் விளையாட்டில் விடாமுயற்சியும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற மனப்பான்மையும் தென்பட்டது.
இப்பிரிவிலிருந்து அர்ஜெண்டினா இரண்டாம் சுற்றுக்கு எளிதில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சவூதி அரேபியாவுக்கு அதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் கூறப்பட்டது.
இப்போது இரண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளன.