நிறைவடையவுள்ள பெல்ஜியத்தின் பொற்காலம்

நிறைவடையவுள்ள பெல்ஜியத்தின் பொற்காலம்

1 mins read
cdee5beb-2222-4f9e-931e-bd08a2af04ce
சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறியது பெல்ஜியம். படம்: ஏஎஃப்பி -

தோஹா: கடந்த சில ஆண்­டு­க­ளாக இது­வரை இல்­லாத அள­வில் பெல்­ஜிய அணி­யில் நட்­சத்­தி­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். அதன் நட்­சத்­தி­ரங்­கள் பல­ருக்கு வய­தா­கி­வ­ரு­வ­தால் முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் வாய்ப்பு பெல்­ஜி­யத்­தி­ட­மி­ருந்து நழு­விக்­கொண்டே போகிறது.

அத­னால் கிண்­ணத்தை வெல்ல பெல்­ஜி­யத்­துக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று பல தரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர். அது­வும் காய­முற்ற தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் ரோமெயு லுக்­காக்கு இல்­லா­மல் பெல்­ஜி­யம் வாகை சூடும் முயற்­சி­யில் இறங்­க­வேண்­டும்.

'எஃப்' பிரி­வில் அதன் முதல் ஆட்­டத்­தில் இன்று கன­டா­வைச் சந்­திக்­கிறது பெல்­ஜி­யம். 1986ஆம் ஆண்­டுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றுள்­ளது கனடா. ஆட்­டத்­தில் பெல்­ஜி­யம் வெல்­லும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இன்­றைய மற்­றோர் 'எஃப்' பிரிவு ஆட்­டத்­தில் மொரோக்­கோ­வும் குரோ­வே­ஷி­யா­வும் மோது­கின்­றன.

இந்­தப் போட்­டி­யி­லும் அசத்தி ரசி­கர்­க­ளைத் தன்­வ­சப்­ப­டுத்­தும் இலக்­கு­டன் உள்­ளது குரோ­வே­ஷியா. சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறாக குரே­வே­ஷியா இறு­தி­யாட்­டம் வரை முன்­னே­றி­யது. அதில் பிரான்­சி­டம் 4-2 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்­தா­லும் தனது விடா­மு­யற்­சி­யால் காற்­பந்து ரசி­கர்­க­ளின் மனத்­தில் நீங்கா இடம்­பி­டித்­தது.