காற்பந்து உலகக் கிண்ணம்: குரோஷியா - மொரோக்கோ 0-0

காற்பந்து உலகக் கிண்ணம்: குரோஷியா - மொரோக்கோ 0-0

1 mins read
b0e1c72a-6b0d-429f-9160-8eecb48be879
கத்தாரில் நடைபெறும் உலகக் காற்பந்துக் கிண்ணப் போட்டியின் எஃப் பிரிவு ஆட்டத்தில் குரோஷியாவின் லோவ்ரோ மாஜெரைத் தடுக்க முயன்றார் மொரோக்கோவின் கானேம் சாயேஸ். படம்: ஏஎஃப்பி -

குரோஷியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் சமநிலையில் முடிந்தது.

கத்தாரில் நடைபெறும் உலகக் காற்பந்துக் கிண்ணப் போட்டியின் எஃப் பிரிவு ஆட்டத்தில் இரு நாடுகளும் சந்தித்தன.

புதன்கிழமை (நவ. 23) மாலை இரண்டு தரப்புகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் களமிறங்கின.

காற்பந்து குரோஷியா ஆட்டக்காரர்களின் வசம் அதிகம் இருந்தபோதும் மொரோக்கோவின் தற்காப்பை அவர்களால் தகர்க்க முடியவில்லை.

கடுமையாகத் தாக்கிய மெரோக்கோ அணி கடைசி நிமிடம் வரை போராடி கோல்களைத் தடுத்தது.

புதன்கிழமை பலரும் எதிர்பார்க்கும் ஜெர்மனி-ஜப்பான் ஆட்டமும் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்