தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவூதி அரேபியாவில் விடுமுறை

1 mins read
5f90d96b-48b2-4ff5-a3dc-bfebc83a6bb7
கோல் போட்ட பிறகு கொண்டாடும் சவூதி வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

ரியாத்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் எதிர்­பாராவித­மாக அர்­ஜென்­டி­னாவை வென்­றது சவூதி அரே­பியா.

அந்த வெற்­றி­யைக் கொண்­டாட சவூதி அரே­பிய மன்­னர் ஒரு­நாள் பொது விடு­முறை அறி­வித்­துள்­ளார்.

அதைத் தொடர்ந்து சவூதி அரே­பி­யா­வில் நேற்று பொது விடு­முறை. நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற 'சி' பிரிவு ஆட்­டத்­தில் அர்­ஜெண்­டி­னாவை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது சவூதி அரே­பியா. அது, உல­கக் கிண்ண வர­லாற்­றில் இது­வரை காணாத பெரிய அதிர்ச்சி.

தோல்­விக்­குக் கார­ணம் ஏதும் சொல்­ல­மு­டி­யாது என்று அர்­ஜெண்­டினா நட்­சத்­தி­ரம் லய­னல் மெஸ்ஸி தனது அணி­யி­ன­ரி­டம் கூறி­யுள்­ளார். பின்­னடை­வைச் சரி­வரக் கையாண்­டால் போட்­டி­யில் அர்­ஜெண்­டினா­வால் மீண்டு­வ­ர­முடி­யும் என்­றும் மெஸ்ஸி குறிப்­பிட்­டார்.