தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அர்ஜெண்டினா உடனான ஆட்டத்தில் மோசமாக காயமுற்ற சவூதி வீரர்: 'நான் நலமாக இருக்கிறேன்' (காணொளி)

1 mins read
77c0912c-d189-444d-adac-2f63087336c3
சக அணியைச் சேர்ந்த கோல்காப்பாளர் பந்தைத் தட்டிவிட பாய்ந்தபோது அவரது முட்டி யாசர் அல்-ஷஹ்ரானி மீது மோதியது. படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாகக் காயமுற்றார் சவூதி அரேபியாவின் யாசர் அல்-ஷஹ்ரானி. அதைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் காயமுற்று பல நிமிடங்களுக்குத் திடலில் சிகிச்சை பெற்றார் 30 வயது அல்-ஷஹ்ரானி. முகத்தின் சில பகுதிகளில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அல்-ஷஹ்ரானிக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தாம் நலமாக இருப்பதாக அவர் ரசிகர்களிடம் மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.

சிகிச்சைக்காக அல்-ஷஹ்ரானியை தனியார் விமானம் மூலம் ஜெர்மனிக்கு அழைத்துச்செல்ல சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டதாக 'கல்ஃப் டுடே' இணையத்தளம் தெரிவித்தது.