கட்டிளங்காளையர் அணிவகுப்பு

தோஹா: இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் தங்­க­ளின் முதல் ஆட்­டத்­தில் சிறப்­பாக விளை­யாடி ரசி­கர்­க­ளைக் கவர்ந்­தன இங்­கி­லாந்து, அமெ­ரிக்க அணி­கள். இன்று நடை­பெ­ற­வுள்ள 'பி' பிரிவு ஆட்­டத்­தில் இவ்­விரு அணி­களும் மோது­கின்­றன.

இரண்டு அணி­க­ளி­லும் பல­ இளம் விளை­யாட்­டா­ளர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். ஈரானை 6-2 எனும் கோல் கணக்­கில் வென்­ற­போது இளை­யர்­க­ளுக்­கு­ரிய துடிப்பு இங்­கி­லாந்­தி­டம் தெள்­ளத் தெளி­வா­கத் தெரிந்­தது.

எனி­னும், உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் இங்­கி­லாந்து இது­வரை அமெ­ரிக்­காவை வென்­ற­தில்லை. கடை­சி­யாக 2010ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் இரு அணி­களும் மோதி­ய­போது அந்த ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது.

எனி­னும். ஈரா­னுக்கு எதி­ரான அபார வெற்றி அந்­தப் போக்கை மாற்­று­வ­தற்கு இங்­கி­லாந்­துக்­குப் போது­மான தன்­னம்­பிக்­கையை வழங்­கக்­கூ­டும். காய­முற்­றி­ருந்த அணித் தலை­வர் ஹேரி கேன் இந்த ஆட்­டத்­தில் விளை­யா­டு­வார் என்று இங்­கி­லாந்­துப் பயிற்­று­விப்­பா­ளர் கேரத் சவுத்­கேட் தெரி­வித்­தி­ருப்­ப­தும் அணிக்கு உற்­சா­கம் தர­லாம்.

அமெ­ரிக்க அணி­யில் விளை­யாட்­டா­ளர்­க­ளின் சரா­சரி வயது 25. இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்­கும் இரண்­டா­வது ஆக இளம் அணி அது.

2018ஆம் ஆண்டு நடை­பெற்ற சென்ற உல­கக் கிண்­ணப் போட்டிக்­குத் தகு­தி­பெ­றத் தவ­றிய அமெ­ரிக்கா அதற்­குப் பிறகு பெரி­தும் மேம்­பட்­டுள்­ளது. பயிற்­று­விப்­பா­ளர் கிரெக் பெர்­ஹால்­டர் பல இளம் வீரர்­களை அணி­யில் சேர்த்­தி­ருப்­பது அதற்­கான கார­ணங்­களில் ஒன்று.

இப்பிரி­வில் வேல்ஸ், ஈரான் ஆகிய அணி­களும் இன்று சந்­திக்­கின்­றன. இங்­கி­லாந்­தி­டம் கண்ட படு­தோல்வி ஈரா­னின் தன்­னம்­பிக்­கை­யைப் பாதிக்­க­லாம். 64 ஆண்டு­களில் முதன்­மு­றை­யாக போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றுள்ள வேல்ஸ் இது­வரை ஏமாற்­றம் தர­வில்லை.

உலகக் கிண்ணம் 2022: உற்சாகத்துடன் ஆடும் இங்கிலாந்தும் அமெரிக்காவும் மோதல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!