ஆனந்த வெள்ளத்தில் ஜப்பான்

ஆனந்த வெள்ளத்தில் ஜப்பான்

1 mins read
46936b95-90fb-4373-b8bf-4a6f7f8e850e
ஜெர்மனிக்கு எதிரான 'இ' பிரிவு ஆட்டத்தில் வெற்றியைக் கொண்டாடும் ஜப்பான் அணியின் வீரர்கள். 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஜப்பான். படம்: ராய்ட்டர்ஸ் -

அல் ரயான்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் ஜெர்­ம­னியை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்று அசத்­தி­யது ஜப்­பான்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற 'இ' பிரிவு ஆட்­டத்­தில் ஜெர்­மனி எளி­தில் வெல்­லும் என்று அதி­கம் எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதற்கு ஏற்­ற­வாறு ஆட்­டத்­தின் முற்­பா­தி­யில் பெனால்­டி­யின் மூலம் முன்­னுக்­கும் சென்­றது.

எனி­னும், ஆட்­டத்­தின் கடைசி 15 நிமி­டங்­களில் இரண்டு கோல்­களைப் போட்டு வெற்­றி­கண்­டது ஜப்­பான்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற 'சி' பிரிவு ஆட்­டத்­தில் அர்­ஜென்­டி­னாவை வென்று காற்­பந்து உலகை அதிர்ச்­சிக்கு உள்­ளாக்­கி­யது சவூதி அரே­பியா. அந்த ஆட்­டத்­தில் அர்­ஜென்­டினா முற்­பா­தி­யில் பெனால்­டி­யின் மூலம் முன்­னுக்­குச் சென்­றது. பிற்­பா­தி­யில் இரண்டு கோல்­க­ளைப் போட்டு வென்­றது சவூதி அரே­பியா.

கிட்­டத்­தட்ட அச்சு அசல் அதே­போல் இந்த ஆட்­ட­மும் அமைந்­தது.

முற்­பா­தி­யில் சிறப்­பாக விளை­யா­டி­யது ஜெர்­மனி. பிற்­பா­தி­யில் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் ஆடி பல­ரைக் கவ­ரும் வண்­ணம் மீண்­டெ­ழுந்­தது ஜப்­பான்.