வெற்றிபெற்றது பெல்ஜியம், கவனம் ஈர்த்தது கனடா

வெற்றிபெற்றது பெல்ஜியம், கவனம் ஈர்த்தது கனடா

1 mins read

அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் கனடாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது பெல்ஜியம். எனினும், நட்சத்திர அணிவகுப்பைக் கொண்ட பெல்ஜியத்திற்கு எதிராக கனடா விட்டுக்கொடுக்காமல் ஆடிய விதம் பாராட்டு பெறும் வண்ணம் அமைந்தது.

ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்களுக்குள் கனடாவின் அல்ஃபோன்சோ டேவிஸ் பெனால்டி வாய்ப்பை நழுவவிட்டார். 44வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் பெல்ஜியத்தின் மிச்சி பாட்சுவாயி.