காற்பந்து உலகிற்கு ஒளியூட்டும் 18 வயது நட்சத்திரம்

காற்பந்து உலகிற்கு ஒளியூட்டும் 18 வயது நட்சத்திரம்

1 mins read
a9f192d2-3f86-4ac7-be42-4bdc669bbd78
கடந்த 64 ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் போட்டுள்ள ஆக இளம் வீரர் ஸ்பெயினின் காவி (இடது). படம்: இபிஏ -

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 'இ' பிரிவு ஆட்­டத்­தில் கோஸ்டா ரிக்­காவை 7-0 எனும் கோல் கணக்­கில் ஊதித் தள்­ளி­யது இளம் வீரர்­க­ளின் துடிப்­பு­டன் மின்­னும் ஸ்பெ­யின்.

கடந்த மூன்று உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் ஸ்பெ­யின் முதல் ஆட்­டத்­தில் வெல்­ல­வில்லை. இம்­முறை அந்­தப் போக்கை அபா­ர­மாக மாற்­றி­யது.

உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் இத்­தனை கோல்­கள் வித்­தி­யா­சத்­தில் ஸ்பெ­யின் வென்­றி­ருப்­பது இதுவே முதல்­முறை.

முற்­பா­தி­யி­லேயே 3-0 எனும் கோல் கணக்­கில் முன்­னுக்­குச் சென்­றது. முன்­னாள் மான்­செஸ்­டர் சிட்டி வீர­ரான ஃபெரான் டோரஸ் ஆட்­டத்­தில் இரண்டு கோல்­க­ளைப் போட்­டார். அவற்­றில் ஒன்று பெனால்­டி­யின் மூலம் விழுந்­தது.

ஏழு கோல்­களில் ஒன்­றைப் போட்­ட­வர் 18 வயது காவி. 1958ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் 17வது வய­தில் கோல் போட்­டார் பிரே­சில் சகாப்­தம் பெலே. அதற்­குப் பிறகு போட்­டி­யில் கோல் போட்­டுள்ள ஆக இளம் வீரர் காவி.

காவி உள்­ளிட்ட இளம் வீரர்­களால் 2010ஆம் ஆண்டு போட்­டி­யில் கிண்­ணத்தை வென்ற ஸ்பெ­யின் புத்­து­யிர் பெற்­றி­ருப்­பது தெளி­வா­கத் தெரிந்­தது.