உலகக் கிண்ணம்: ஆட்டத்திலிருந்து வேல்ஸ் கோல்காப்பாளர் வெளியேறினார், பட்டியலில் ஈரான் மேலேறியது

உலகக் கிண்ணம்: ஆட்டத்திலிருந்து வேல்ஸ் கோல்காப்பாளர் வெளியேறினார், பட்டியலில் ஈரான் மேலேறியது

1 mins read
57505b77-2133-431d-bdfc-647aef29217a
ஈரானிய வீரரின் கோல் முயற்சியைத் தடுக்க வேல்ஸ் கோல்காப்பாளரின் தப்பாட்டம் காரணமாக அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற 'பி' பிரிவு ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 2-0 எனும் கோல் கணக்கில் ஈரான் தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் சமநிலை காணும் என தெரிந்தது. ஆனால், ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் நிலவரம் ஈரானுக்குச் சாதகமாக மாறியது.

வேல்ஸ் கோல்காப்பாளரின் தப்பாட்டம் காரணமாக ஆட்டத்தில் 84வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால், வேல்ஸ் அணிக்கு ஒரு வீரர் குறைந்த நிலையில், ஈரான் வீரர்கள் அடுத்த 15 நிமிடங்களுக்கு தாக்குதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். அந்த முயற்சியின் பலனாக அந்த அணி இரு கோல்களைப் போட்டு வெற்றியைத் தன்வசமாக்கியது.