ஐந்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கோல் போட்ட முதல் வீரர் எனும் சாதனையை போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
'எச்' பிரிவு ஆட்டத்தில் கானா அணியை 3-2 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் நேற்று வியாழக்கிழமை வென்றது.
ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரொனால்டோ, ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"எனது ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டியில் இது ஓர் அழகிய தருணம். இது எங்களுக்கு ஒரு முக்கியமான வெற்றி," என்றார் அவர்.
வரும் திங்கள்கிழமை நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் உருகுவே அணியுடன் போர்ச்சுகல் பொருதுகிறது.

