சாதனை மேல் சாதனை படைக்கும் ரொனால்டோ

சாதனை மேல் சாதனை படைக்கும் ரொனால்டோ

2 mins read
9628bfb9-8279-4af9-afbb-91f7426c16fa
கானா­வுக்கு எதி­ராக கோல் போட்டு, தமது சாத­னைப் பட்­டி­யலை நீட்­டித்து, துள்­ளிக் குதித்துக் கொண்­டா­டிய ரொனால்டோ. முதல் ஆட்­டத்­தில் வெற்றி பெற்­றதை அடுத்து போர்ச்­சு­கல் ஆட்­டக்­கா­ரர்­கள் உத்­வே­கம் அடைந்­து இருப்­ப­தாக அவர் கூறி­னர்.படம்: ராய்ட்டர்ஸ் -

தோஹா: வாழ்­வில் எத்­த­கைய சவால்­களை எதிர்­கொண்­டா­லும் அவற்றை முறி­ய­டித்து சாத­னை­க­ளாக மாற்­றும் ஆற்­றல் கொண்­ட­வர் போர்ச்­சு­க­லின் நட்­சத்­திர வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ.

அண்­மை­யில் அவர் அளித்த பேட்­டி­யில் மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் நிர்­வாகி டென் ஹாக்­கைக் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தார்.

இத­னால் அவர் அக்­குழு

விலி­ருந்து நீக்­கப்­பட்­டார்.

கவ­னச் சித­றல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இத்­த­கைய சூழல் வேறோர் ஆட்­டக்­கா­ர­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தால் அவ­ரால் ஆட்­டங்­களில் கவ­னம் செலுத்தி இருக்க முடி­யாது.

ஆனால் ரொனால்டோ வேறு ரகம். அணித் தலை­வர், நட்­சத்­திர தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் என்­கிற முறை­யில், போர்ச்­சு­கல் அணியை மிகச் சிறப்­பான முறை­யில் வழி­ந­டத்தி, உல­கக் கிண்­ணப் போட்டி யில் அதன் முதல் ஆட்­டத்­தில் வெற்றி பெறச் செய்­துள்­ளார்.

'எச்' பிரிவு ஆட்­டத்­தில் கானாவை போர்ச்­சு­கல் நேற்று முன்­தி­னம் 3-2 எனும் கோல் கணக்­கில் தோற்­க­டித்­தது.

முதல் கோலை ரொனால்டோ போட்­டார்.

ஆட்­டத்­தின் 65வது நிமி­டத்­தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக்­கி­னார்.

இதன் மூலம் ஐந்து உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­களில் கோல் போட்ட முதல் ஆட்­டக்­கா­ரர் எனும் சாத­னை­யும் பெரு­மை­யும் ரொனால்­டோ­வைச் சேரும்.

"இது நான் கள­மி­றங்­கும் ஐந்­தா­வது உல­கக் கிண்ண காற்பந்­துப் போட்டி. இந்­நி­லை­யில், மிக அழ­கிய, மறக்க முடி­யாத அனு­ப­வம் கிடைத்­துள்­ளது. முதல் ஆட்­டத்­தில் வெற்றி பெற்­று­விட்­டோம்.

"உல­கக் கிண்­ணப் பய­ணத்தை வெற்­றி­யு­டன் தொடங்­கி­யுள்­ளோம். இது மிக­வும் முக்­கி­யம். இத்­த­கைய போட்­டி­களில் முதல் ஆட்­டத்­தைக் கைப்­பற்­று­வது அவ­சியம்," என்று ஆட்­டத்­துக்­குப் பிறகு பெரு­மி­தத்­து­டன் தெரி­வித்­தார் ரொனால்டோ.

மற்­றோர் ஆட்­டத்­தில் உரு­கு­வே­யும் தென்­கொ­ரி­யா­வும் கோல் ஏது­மின்றி சம­நிலை கண்­டன. 'எச்' பிரி­வில் இடம்­

பெ­றும் இவ்­விரு குழுக்­களும் வெற்­றிக்­குக் குறி­வைத்­துப் போரா­டின.

இருப்­பி­னும், இரு­த­ரப்பு குழுக்­க­ளா­லும் கடை­சி­வரை கோல்­போட முடி­யா­மல் போனது.

கோல் போட கிடைத்த சில பொன்­னான வாய்ப்­பு­க­ளை­யும் இரு­த­ரப்பு

ஆட்­டக்­கா­ரர்­கள் நழு­வ­விட்­டது ரசி­கர்­

க­ளுக்­குப் பெரும் ஏமாற்­றத்­தைத் தந்­தது.

சவூதி அரே­பியா, ஜப்­பான் ஆகிய ஆசியக் குழுக்­கள், இந்த உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் அவற்­றின் முதல்

ஆட்­டங்களில் வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளன. அந்த வரி­சை­யில் வெற்றி முனைப்­பு­டன் தென்­கொ­ரியா கள­மி­றங்­கி­யது. ஆனால், உரு­கு­வே­யின் தற்­காப்பு அரண் பிடி­வா­த­மாக நிற்க, சம­நிலை கண்டு ஒரு புள்ளி மட்­டும் பெற்­றது தென்­கொ­ரியா. இருப்பினும், தங்கள் செயல்பாடு குறித்து தென்கொரிய நட்சத்திர வீரர் சொன் ஹியூங் மின் மகிழ்ச்சி தெரிவித்தார்.