தோஹா: பலமான அணிகளுக்கு எதிராக வெற்றிகண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளன 'எஃப்' பிரிவில் உள்ள மொரோக்கோ, கனடா.
உலகக் கிண்ண வரலாற்றில் ஒருமுறை இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது மொரோக்கோ. இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே போட்டியில் இடம்பெற்ற கனடா முதல் சுற்றைத் தாண்டியதில்லை.
முதல் ஆட்டத்தில் குரோவேஷியாவுடன் கோலின்றி சமநிலை கண்ட மொரோக்கோ பலம்வாய்ந்த பெல்ஜியம் அணியை இன்று சந்திக்கிறது. கனடாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டாலும் பெல்ஜியம் சரியாக ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் அதை மாற்றும் இலக்குடன் உள்ளது.
இன்றைய மற்றோர் ஆட்டத்தில் சென்ற போட்டியில் இறுதியாட்டம் வரை முன்னேறிய குரோவேஷியாவுடன் கனடா மோதுகிறது.

