களையிழந்து காணப்பட்ட இங்கிலாந்து

களையிழந்து காணப்பட்ட இங்கிலாந்து

1 mins read
aa87f23b-de26-42b3-b044-ba4d97fb44b1
பந்துக்காகப் போட்டியிடும் இங்கிலாந்து (வெள்ளை சட்டை வீரர்கள்), அமெரிக்க விளையாட்டாளர்கள். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

அல் கோர்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற 'பி' பிரிவு ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

முதல் ஆட்டத்தில் 6-2 எனும் கோல் கணக்கில் ஈரானை வீழ்த்திய இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் கோல் வாய்ப்புகளை அதிகம் உருவாக்கவில்லை. இருந்தாலும், அமெரிக்கா எளிதில் வெல்லமுடியாதபடி தனது அணி விளையாடியது தனக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறினார் இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட்.

'பி' பிரிவின் அடுத்த ஆட்டத்தில் வேல்சை வென்றால் இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி. ஈரானை வென்றால் அமெரிக்காவும் முன்னேறும்.