உற்சாகம் இல்லாது காணப்பட்ட நெதர்லாந்து

உற்சாகம் இல்லாது காணப்பட்ட நெதர்லாந்து

1 mins read
849c8bc4-939d-411b-8159-b4d50814a1e7
நெதர்லாந்தின் கொடி காக்போ. படம்: ராய்ட்டர்ஸ் -

அல் ரயான்: நெதர்­லாந்­தும் எக்­கு­வ­டோ­ரும் மோதிய உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 'ஏ' பிரிவு ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நிலை­யில் முடிந்­தது.

ஆட்­டம் தொடங்கி சுமார் ஐந்தே நிமி­டங்­களில் நெதர்­லாந்தை முன்­னுக்கு அனுப்­பி­னார் கொடி காக்போ. பிற்­பா­தி­யில் கோல் எண்­ணிக்­கை­யைச் சமப்­ப­டுத்­தி­னார் எக்­கு­வ­டோர் அணித் தலை­வர் எனர் வலென்சியா.

நெதர்­லாந்து கோல் வாய்ப்­பு­களை உரு­வாக்க சிர­மப்­பட்­டது. அதன் விளை­யாட்­டில் உற்­சா­கம் இல்லை.

எனி­னும், போட்டியில் போகப் போக நெதர்­லாந்து சிறப்­பாக விளை­யா­டும் என்று தான் நம்­பி­க்கை கொண்­டுள்­ள­தா­கச் சொன்­னார் அணித் தலை­வர் வெர்­ஜில் வேன் டைக்.

கத்­தா­ருக்கு எதி­ரான தனது கடைசி 'ஏ' பிரிவு ஆட்­டத்­தில் வென்­றால் நெதர்­லாந்து இரண்­டாம் சுற்றுக்கு முன்­னே­று­வது உறுதி.