வருத்தம் தரும் வரலாறு படைத்த கத்தார்

வருத்தம் தரும் வரலாறு படைத்த கத்தார்

2 mins read
487cc608-6ed2-4641-b13e-0731af156238
வருத்தத்துடன் திடலில் படுத்திருந்த கத்தாரின் விளையாட்டாளர் இஸ்மாயில் முகம்மது. இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்ட செனகல் வீரர்கள். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

தோஹா: இவ்­வாண்­டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முத­லில் வெளி­யேற்­றப்­பட்­டுள்ள அணி­ கத்தார். போட்டியை ஏற்று நடத்தும் ஓர் அணி இவ்வளவு விரைவில் வெளியேற்றப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற 'ஏ' பிரிவு ஆட்­டத்­தில் சென­க­லி­டம் 3-1 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்­தது கத்­தார். அதற்­குப் பிறகு அதே பிரி­வில் இடம்­பெ­றும் நெதர்­லாந்­தும் எக்­கு­வ­டோ­ரும் மோதிய ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது. அதைத் தொடர்ந்து கத்­தார் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற்றப்படுவது உறு­தி­யா­னது.

எக்­கு­வ­டோ­ருக்கு எதி­ரான முதல் ஆட்­டத்­தில் 2-0 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்த கத்­தார் இந்த ஆட்­டத்­தில் சற்று மேம்­பட்­டி­ருந்­தது. முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் பங்­கேற்­கும் இந்த அணி போட்­டி­யில் தனது முதல் கோலை­யும் போட்­டது.

எனி­னும், இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­று­வ­தற்­குத் தேவை­யான துடிப்பான ஆட்டம் கத்­தா­ரி­டம் காணப்­ப­ட­வில்லை.

கத்­தா­ரின் தோல்வி அதன் ரசி­கர்­கள் சில­ரைக் கோபத்­துக்கு ஆளாக்­கி­யது. குறைந்­த­பட்­சம் தாங்­கள் ரசிக்­கும் அள­விற்கு கத்தாரின் விளை­யாட்டு இருந்­தி­ருக்­க­வேண்­டும் என்ற ஆசை­யைக் கொண்­டி­ருந்­த­தாக சிலர் கூறினர். இறு­தி­யில் அந்த அள­வு­கூட அணி­யின் விளை­யாட்டு இல்லை என்று சொல்லி அவர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

முதல் ஆட்­டத்­தில் கத்தார் சரி­யாக விளை­யா­டா­தது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யது; ஆனால் இரண்­டா­வது ஆட்­டத்­தி­லும் அணி ஏமாற்­றத்தைத் தந்தது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாத ஒன்று என்­ற­னர் வேறு சிலர்.

உல­கக் கிண்ண வர­லாற்­றில் இது­வரை இரு­மு­றை­ மட்டுமே போட்டியை ஏற்று நடத்­தும் நாடு­களின் அணி­கள் முதல் சுற்றைத் தாண்டவில்லை. 2010ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் தென்­னாப்­பி­ரிக்­கா­வுக்­கும் இதே நிலை ஏற்­பட்­டது.

2002ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் அரை­யி­று­திச் சுற்­று­வரை முன்­னேறி ஆப்­பி­ரிக்­கா­விற்­குப் பெருமை சேர்த்த சென­கல், கத்­தாரை வென்­ற­தன் மூலம் இரண்­டாம் சுற்றுக்கு முன்­னே­றும் வாய்ப்­பைத் தக்­க­வைத்­துக்­கொண்­டது. 'ஏ' பிரி­வில் தனது கடைசி ஆட்­டத்­தில் எக்­கு­வ­டோரை வென்­றால் சென­கல் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­று­வது உறுதி.

எனி­னும், துடிப்­பு­டன் விளை­யாடும் எக்­கு­வ­டோரை வெல்­வது சவா­லா­ன­தாக இருக்­கக்­கூ­டும்.