கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கான மேடை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கான மேடை

1 mins read
aa57ddf9-1003-4878-8822-fd8ddedd9496
போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (நடுவில்) கோலைக் கொண்டாடும் போர்ச்சுகல் விளையாட்டாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

லுசாய்ல்: உலகக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 'எச்' பிரிவு ஆட்­டத்­தில் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வின் போர்ச்­சு­கல் இன்று உரு­கு­வே­யைச் சந்­திக்­கிறது. கானா­வுக்கு எதி­ரான முதல் ஆட்­டத்­தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்­கி­னார் 37 வயது ரொனால்டோ. அதன் மூலம் ஐந்து உல­கக் கிண்­ணப் ேபாட்டிகளில் கோல் போட்ட முதல் வீரர் என்ற பெரு­மை­யைப் பெற்­றார்.

மற்­றொரு வய­தான நட்­சத்­தி­ர­மான 35 லயது லூயிஸ் சுவா­ரெ­ஸைக் கொண்ட உரு­கு­வே­யை இன்று சந்­திக்­கிறது போர்ச்­சு­கல். அந்த ஆட்­டத்­தில் போர்ச்­சு­கலை வெல்­லச் செய்து அணியை இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னேற வைப்­பது ரொனால்­டோ­வின் இலக்கு. அண்­மை­யில் பல சர்ச்­சை­க­ளுக்கு ஆளானபோதும் தனது ஆற்­ற­லில் எந்­தக் குறை­யும் ஏற்­ப­ட­வில்லை என்­பதை ரொனால்டோ நிரூ­பிக்க ரசிகர்­கள் ஆவ­லு­டன் காத்­தி­ருக்கின்றனர்.

இதற்கிடையே, போர்ச்­சு­க­லின் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் ெடனிலோ பெரே­ரா­வின் நெஞ்சு எலும்­பில் முறிவு ஏற்­பட்­டுள்­ளது. பயிற்­சி­யின்­போது அவர் காய­முற்­றார். அதைத் தொடர்ந்து பெரேரா போட்­டி­யில் இனி பங்­கேற்­பாரா என்­பது கேள்விக்­கு­றி­யாக உள்­ளது.

முதல் உல­கக் கிண்­ணப் போட்டி­யில் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றிய உரு­கு­வே­யும் போர்ச்­சு­க­லும் இன்று பின்­னி­ரவு மூன்று மணிக்­குச் சந்­திக்­கின்­றன. ரொனால்டோ, சுவா­ரெஸ் நேருக்கு நேர்!

இன்­றைய மற்­றோர் 'எச்' பிரிவு ஆட்­டத்­தில் தென்­கொ­ரி­யா­வும் கானா­வும் சந்­திக்­கின்­றன. ஆட்­டத்­தில் தென்­கொ­ரியா வென்­றால் அந்த அணி இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்­பு­கள் கணி­ச­மாக அதி­க­ரிக்­கும்.