மீண்டெழுந்தது கோஸ்டா ரிக்கா

மீண்டெழுந்தது கோஸ்டா ரிக்கா

1 mins read
c3e974a5-222f-46f7-aba2-9af459464f91
1-0 எனும் கோல் கணக்கில் ஜப்பானை வென்றது கோஸ்டா ரிக்கா. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோலைப் போட்டார் கேய்ஷர் ஃபுல்லர் (இடது). படம்: ஏஎஃப்பி -

அல் ரயான்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் ஜெர்­மனியை வென்று அசத்­திய ஜப்­பானை அதிர வைத்துள்ளது, ஸ்பெ­யி­னி­டம் 7-0 எனும் கோல் கணக்­கில் படு­தோல்வி கண்ட கோஸ்டா ரிக்கா. 'இ' பிரிவு ஆட்­டத்­தில் 1-0 எனும் கோல் கணக்­கில் கோஸ்டா ரிக்கா வென்­றது.

இந்த ஆட்­டத்­தில் வென்­றி­ருந்­தால் போட்­டி­யின் ஆகச் சவா­லான பிரி­வி­லி­ருந்து இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றிய முதல் அணி என்ற பெருமை ஜப்­பா­னுக்­குக் கிடைத்­தி­ருக்­கலாம். ஆனால், கோல் வாய்ப்பு­களைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளத் தவ­றி­யது ஜப்பான்.

இனி இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னேற கோஸ்டா ரிக்­கா­, ஜப்பான் இரண்டுக்கும் வாய்ப்­புள்­ளது.