தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ணம்: மெக்சிகோ, சவூதிக்கு இடையே விறுவிறு ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்

1 mins read
8b47a1fc-b9e6-49f4-be62-2c549a607e6c
சவூதி-போலந்து ஆட்டத்தை சவூதி தலைநகர் ரியாத்தில் கண்டுகளிக்கும் ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறும் 'சி' பிரிவு ஆட்டத்தில் சவூதி அரேபியாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறும் என்பதை தாம் எதிர்பார்ப்பதாக மெக்சிகோ பயிற்றுவிப்பாளர் டாடா மார்ட்டினோ கூறியுள்ளார்.

அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற இவ்விரு அணிகளுக்கும் மகத்தான வெற்றி தேவை.

'சி' பிரிவு தொடக்க ஆட்டத்தில் போலந்தும் மெக்சிகோவும் பொருதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி முடிந்தது. ஆனால், அர்ஜெண்டினா உடனான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் மெக்சிகோ தோற்றது.

நடப்பு உலகக் கிண்ணப் போட்டியில் மெக்சிகோ இன்னும் கோல் எதுவும் போடவில்லை. அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற சவூதியை குறைந்தது மூன்று கோல் வித்தியாசத்தில் மெக்சிகோ தோற்கடிக்க வேண்டும். ஆனால், அர்ஜெண்டினாவை போலந்து வென்றால், மெக்சிகோவுக்கு எந்த விதமான வெற்றியும் போதுமானது.