உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தென்கொரியா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நழுவிப்போகும் நிலையில் உள்ளது.
ஆட்டத்தின்போது 2-0 எனும் கோல் கணக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்ட தென்கொரியா ஓரணியாகத் திரண்டு இரு கோல்களைப் போட்டு ஒரு கட்டத்தில் சமநிலை கண்டது. இதனால் தென்கொரிய வீரர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது, ரசிகர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டது.
ஆனால், அவர்களது நம்பிக்கையும் உற்சாகமும் சிறிது நேரம்தான் நீடித்தது. கானா தரப்பில் மேலும் ஒரு கோலைப் போட, தென்கொரியா சரிந்தது.
எப்படியாவது சமநிலை கண்டுவிட வேண்டும் என்ற வேட்கையில் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தென்கொரிய வீரர்கள் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் அது கைகூடவில்லை. இறுதியில் 3-2 எனும் கோல் கணக்கில் கானா வாகை சூடியது.


