பலரைக் கவரும் எக்குவடோரின் இளையர் பட்டாளம்

பலரைக் கவரும் எக்குவடோரின் இளையர் பட்டாளம்

2 mins read
a406d062-2464-4e29-85c8-663ddba80840
-

அல் ரயான்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் இது­வரை இல்­லாத அளவு ரசி­கர்­க­ளைக் கவர்ந்­துள்­ளது எக்­கு­வ­டோர் அணியின் (படம்) விளை­யாட்டு.

இதற்கு முன்பு மூன்று முறை போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றது எக்­கு­வ­டோர். ஆனால் இந்­தப் போட்­டி­யில் இருப்­ப­தைப் போல் அதிக கவ­னத்தை ஈர்த்­த­தில்லை.

இம்­முறை பல இளம் விளை­யாட்­டா­ளர்­கள் இருப்­ப­தால் அணி உத்­வே­கத்­து­டன் விளை­யா­டு­வது அதற்குக் காரணம்.

'ஏ' பிரி­வின் முதல் ஆட்­டத்­தில் எக்­கு­வ­டோ­ரின் வேகத்­தைச் சமா­ளிக்க சிர­மப்­பட்­டது கத்­தார். நெதர்­லாந்­துக்கு எதி­ரான அடுத்த ஆட்­டத்­தின் முதல் ஐந்து நிமி­டங்­க­ளுக்­குள் பின்­னுக்­குச் சென்­ற­போ­தும் விரை­வில் மீண்டு­வந்­தது. நெதர்லாந்தால் எக்குவடோரை சரிவரக் கையாள முடியவில்லை.

போட்­டி­யில் இது­வரை மூன்று கோல்­க­ளைப் போட்டுள்­ளது எக்­கு­வ­டோர். அனைத்து கோல்­க­ளை­யும் போட்­ட­வர், இளம் படை­யின் தள­ப­தி­யாக இருக்­கும் அணித் தலை­வர் எனர் வலென்­சியா.

இது­வரை அதி­கம் கவ­னிக்­கப்­டா­தி­ருந்த 33 வயது வலென்­சியா இப்­போது உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் ஆக அதிக கோல்­களைப் போட்டு 'கோல்­டன் பூட்' விருதை வெல்­லும் இலக்­கு­டன் இருக்­கி­றார்.

எனி­னும், முதல் இரு ஆட்டங்களிலும் வலென்சியா காய­ம­டைந்­தார். இன்று சென­க­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் வலென்­சியா இடம்­பெ­று­வார் என்று எக்­கு­வ­டோர் நம்­பிக்கை கொண்­டுள்­ளது.

அவர் இல்­லா­விட்­டால் அந்­தக் குறை அணி­யின் விளை­யாட்­டில் தெரி­ய­லாம்.

இன்றைய ஆட்­டத்­தில் வெற்­றி­காணும் அணி இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­று­வது உறுதி.

நட்­சத்­தி­ரம் சாடியோ மானே இல்­லாத குறை சென­க­லி­டம் உள்­ளது. எனினும் அவர் இல்­லா­ம­லும் தன்­னால் வெற்­றி­கா­ண­மு­டி­யும் என்­பதை கத்­தா­ருக்கு எதி­ரான ஆட்­டத்­தில் நிரூ­பித்­தது.

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலானதாக இருக்கலாம். இதுவே 'ஏ' பிரிவில் இரு அணிகளும் களமிறங்கும் கடைசி ஆட்டம்.