கேமரூனின் போராட்டம்

கேமரூனின் போராட்டம்

1 mins read
1613e2d4-62a9-4bcf-96f7-0d66e264ace5
கேமரூனின் மூன்றாவது கோலைப் போட்டார் எரிக் மேக்சிம் சூப்பா-மோட்டிங் (வலது). படம்: ஏஎஃப்பி -

அல் வாக்­கிரா: கேம­ரு­னும் செர்­பி­யா­வும் மோதிய 'ஜி' பிரிவு ஆட்­டம் 3-3 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது.

இப்­பி­ரி­வில் இவ்­விரு அணி­களும் தங்­க­ளின் முதல் ஆட்­டத்­தில் தோல்­வி­ய­டைந்­தன. அத­னால் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்­பைத் தக்­க­வைத்­துக்­கொள்ள செர்பியாவும் கேமரூனும் குறைந்­த­பட்­சம் தோல்வி­யைத் தவிர்க்­க­வேண்­டிய நிலை­யில் இருந்­தன.

29வது நிமி­டத்­தில் கேம­ரூனை முன்­னுக்கு அனுப்­பி­னார் ஷோன்-சார்ல்ஸ் காஸ்­ட­லெட்டோ. அதற்­குப் பிறகு முற்­பா­தி­யின் கடைசி சில நிமி­டங்­களில் மள­ம­ள­வென்று செர்­பி­யாவை முன்­னுக்கு அனுப்­பி­னர் ஸ்ட்­ரா­ஹின்யா பாவ்­லோ­விச், சர்ெஹெய் மிலிங்­கோ­விச்-சாவிச்.

பின்­னர் 53வது நிமி­டத்­தில் செர்­பி­யா­வின் மூன்­றா­வது கோலைப் போட்­டார் அலெக்­சாண்­டர் மிட்­ரோ­விச். ஆனால் 66வது நிமி­டத்­துக்­குள் கோல் எண்­ணிக்கை சம­மா­னது. வின்­சென்ட் அபு­பாக்­கார், எரிக் மேக்­சிம் சூப்பா-மோட்­டிங் ஆகி­யோர் கேம­ரூ­னின் எஞ்­சிய இரு கோல்­களைப் போட்­ட­னர்.