எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கிய மொரோக்கோ

தோஹா: உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் 'எஃப்' பிரிவு பெல்­ஜி­யத்தை 2-0 எனும் கோல் கணக்­கில் வென்று காற்­பந்து உலகை அதி­ர­வைத்­தது மொரோக்கோ.

போட்­டி­யில் அதி­கம் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய அணி­களில் ஒன்­றாக பெல்­ஜி­யம் கரு­தப்­ப­டு­கிறது. ஆனால் வய­தா­கி­விட்ட அதன் பல நட்­சத்­தி­ரங்­க­ளால் முன்­பைப் போல் சிறப்­பாக விளை­யா­ட­மு­டி­யாது என்ற அச்­ச­மும் இருந்து வந்­தது.

அதை நிரூ­பிக்­கும் வண்­ணம் அமைந்­தது மொரோக்­கோ­வின் வெற்றி. இந்த வெற்­றி­யின் மூலம் மொரோக்­கோ­விற்கு இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

ரொமெய்ன் சாய்ஸ், ஸக்­கா­ரியா அபூக்­லால் ஆகி­யோர் கோல்­க­ளைப் போட்­ட­னர். இரண்டு கோல்­களும் ஆட்­டத்­தின் கடைசி 20 நிமி­டங்­க­ளுக்­குள் விழுந்­தன.

மொரோக்­கோ­வின் வெற்­றி­யைத் தொடர்ந்து பெல்­ஜி­யத்­தில் தலை­நகர் புர­சல்ஸ் உள்­ளிட்ட பகு­தி­களில் கல­வ­ரம் மூண்­டது. வாக­னங்­க­ளுக்­குத் தீ வைக்­கப்­பட்­டது, கல­வ­ரத்­தில் ஈடு­பட்­டோர்­மீது காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப் புகை­யைப் பீய்ச்­சி­ய­டித்­த­னர்.

அணி­க­ளின் ரசி­கர்­க­ளுக்­கி­டையே கல­வ­ரம் மூண்­டதா என்­பது தெரி­ய­வில்லை. மொரோக்கோ வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் பெல்ஜியத்தில் வாழ்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!