அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் கனடாவை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது குரோவேஷியா. தோல்வியைத் தொடர்ந்து கனடா போட்டியிலிருந்து வெளியேறுவது உறுதியானது.
ஆட்டம் தொடங்கி இரண்டே நிமிடங்களுக்குள் கனடா முன்னுக்குச் சென்றது. ஆனால் அதற்குப் பிறகு குரோவேஷியாதான் ஆட்டத்தில் முழு ஆதிகம் செலுத்தியது. குரோவேஷியாவின் ஆண்ட்ரெய் கிராமாரிச் இரண்டு கோல்களைப் போட்டார். முற்பாதியில் கோல் எண்ணிக்கை 2-1. பிற்பாதியில் மேலும் இரு கோல்கள் விழுந்தன.
36 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெற்ற கனடாவின் கனவுப் பயணம் முடிந்தது. குரோவோஷியா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்தது.

