கத்தாரில் ஆச்சரியம் தரும் வெற்றி: ஒன்றுசேரும் அரபு ரசிகர்கள்

கத்தாரில் ஆச்சரியம் தரும் வெற்றி: ஒன்றுசேரும் அரபு ரசிகர்கள்

1 mins read
4f98f372-b3d6-4d29-a2d4-c41c122ba950
தங்கள் நாட்டுக் கொடிகளுடன் புகைப்படத்துக்குக் காட்சியளிக்கும் அரபு ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி -

மத்திய கிழக்கில் நடைபெறும் முதல் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரபு அணிகளின் ஆச்சரியமூட்டும் வெற்றி, அவர்களது ஆதரவாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்போட்டியின் முதல் அதிர்ச்சியை சவூதி அரேபியா அளித்தது. இருமுறை உலகக் கிண்ண வெற்றியாளரான அர்ஜெண்டினாவை அந்த அணி வீழ்த்தி காற்பந்து உலகை வியப்பில் ஆழ்த்தியது.

ஃபிஃபா உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பெல்ஜியமை வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ வீழ்த்தியது மற்றோர் ஆச்சரியம்.

தத்தம் பிரிவுகளில் இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ள வேளையில், போட்டியின் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற சவூதி, மொரோக்கோ இவ்விரு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

அப்படி அது நடந்தால், உலகக் கிண்ணப் போட்டியில் அரபு நாடுகள் இவ்வளவு தூரம் சென்றிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும்.

வரலாற்றில் முத்திரை பதிப்பதற்கான இந்த வாய்ப்பு, தோஹாவில் அரபு ஆதரவாளர்களிடையே ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.