உலகக் கிண்ணம்: அடுத்த சுற்றுக்கு முன்னேற சவூதி கடும் போட்டி கொடுக்கக்கூடும்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ‘சி’ பிரிவில் சவூதி அரேபியாவைவிட அர்ஜெண்டினா, மெக்சிகோ, போலந்து அணிகளில் இரு அணிகளே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் சாத்தியம் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.

என்றாலும், புதன்கிழமை நடைபெறும் மெக்சிகோ உடனான ஆட்டத்தை முன்னிட்டு, சவூதி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதன் கையில்தான் உள்ளது.

சவூதி அரேபியா நாளைய ‘சி’ பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோவைக் கட்டாயமாக வெல்லவேண்டும்.

எனினும், அவ்வாறு நிகழாவிட்டாலும் ஏற்கெனவே எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது சவூதி அரேபியா.

“அவ்வளவு சிறப்பாக விளையாடுவோம் என்று உலகில் யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. சவூதி அரேபியாவில் அணியின் விளையாட்டாளர்கள் பலருக்குப் பரிச்சயமானவர்கள். ஆனால் உலகளவில் எங்கள் விளையாட்டாளர்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காது,” என்று அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் சவூதி அரேபியா வெற்றிபெற்றதைப் பற்றிப் பேசினார் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹர்வி ரெனார்ட்.

இரண்டாம் ஆட்டத்தில் போலந்திடம் தோல்வியடைந்தது சவூதி அரேபியா. எனினும், பிரிவின் கடைசி ஆட்டத்தில் வென்றால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை உருவெடுத்திருப்பதே சவூதி அரேபியாவுக்குப் பெருமைதான்.

மெக்சிகோ இரண்டாம் சுற்றுக்கு முன்னேற, அது நாளைய ஆட்டத்தில் குறைந்தது மூன்று கோல் வித்தியாசத்தில் சவூதி அரேபியாவை வெல்லவேண்டும், போலந்து அர்ஜெண்டினாவிடம் தோல்வியடையாமல் இருக்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!