தோஹா: இன்று நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'டி' பிரிவு ஆட்டத்தில் டென்மார்க்கை வென்றால் ஆஸ்திரேலியா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிடும். சென்ற ஆட்டத்தில் துனீசியாவை வென்றதைத் தொடர்ந்து கூடிய தன்னம்பிக்கையும் டென்மார்க் கோல் போட சிரமப்படுவதும் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையலாம்.
அதே வேளையில், களையிழந்து காணப்படும் டென்மார்க் இன்று மீண்டெழுந்தால் அது ஆஸ்திரேலியாவுக்குப் பிரச்சினையாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவை வெல்வதற்குத் தேவையான நட்சத்திரங்கள் டென்மார்க்கிடம் உள்ளனர். மிகுந்த உற்சாகத்துடன் இரு அணிகளும் இன்று களமிறங்கக்கூடும்.
இன்றைய மற்றோர் ஆட்டத்தில் ஏற்கெனவே இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நடப்பு வெற்றியாளரான பிரான்சை வென்றால் துனீசியாவும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற சிறு வாய்ப்புள்ளது.

