தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு பிரேசிலை முன்னேறவைத்துள்ளார் கசமியரோ.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான 'ஜி' பிரிவு ஆட்டத்தில் விறுவிறுப்பாக விளையாடினாலும் கோல் போட சிரமப்பட்டது பிரேசில். அணியின் பல நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர்கள் செய்யமுடியாததை செய்துமுடித்தார் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தும் நடுத்திடல் வீரரான கசமியரோ.
83வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார். பிரேசில் கவர்ச்சியாக விளையாடி கோல் போடும் என்ற கனவுடன் அரங்கில் திரண்ட ரசிகர்களின் கனவு கரையாமல் பார்த்துக்கொண்டார் கசமியரோ.

