போர்ச்சுகலைத் தூக்கி நிறுத்திய ஃபெர்னாண்டஸ்

போர்ச்சுகலைத் தூக்கி நிறுத்திய ஃபெர்னாண்டஸ்

1 mins read
c4565c1a-24aa-4f81-8482-1eefd62d7ecc
போர்ச்சுகலின் புரூனோ ஃபெர்னாண்டஸ். படம்: ஏஎஃப்பி -

லுசாய்ல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'எச்' பிரிவு ஆட்டத்தில் உருகுவேயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது போர்ச்சுகல். ஆட்டத்தின் இரண்டு கோல்களையும் போட்டவர் புரூனோ ஃபெர்னாண்டஸ்.

எனினும், முதல் கோலை அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டிருக்கலாம் என்ற குழப்பம் நிலவியது.

இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுகல் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானது.