வாழ்வா சாவா என்ற நிலை; தகுதிபெற கடும் போட்டி

தோஹா: உல­கக் கிண்ண காற்­

பந்­துப் போட்­டி­யில் காலி­று­திக்கு முந்­திய சுற்­றுக்கு ஜெர்­மனி மீண்­டும் தகுதி பெறா­மல் வெளி­யே­றி­னால் அது மிகப் பெரிய அதிர்­

வ­லை­களை ஏற்­ப­டுத்­தும்.

2018ஆம் ஆண்­டில் ரஷ்­யா­வில் நடை­பெற்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் ஜெர்­மனி குழு முதல் சுற்­று­டன் சொந்த மண் திரும்­பி­யது.

இம்­முறை முதல் ஆட்­டத்­தில் ஜப்­பா­னி­டம் 2-1 எனும் கோல் கணக்­கில் அதிர்ச்­சித் தோல்வி அடைந்த பிறகு, ஸ்பெ­யி­னி­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நிலை கண்டு ஒரு புள்ளி மட்­டுமே

பெற்­றுள்­ளது ஜெர்­மனி.

சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று பின்­னி­ரவு 3 மணிக்கு கோஸ்டா ரிக்­கா­வு­டன் ஜெர்­மனி மொது­கிறது.

இந்த ஆட்­டத்­தில் ஜெர்­மனி வெற்றி பெற்றே ஆக வேண்­டும்.

இந்த ஆட்­டத்­தில் ஜெர்­மனி வெற்றி பெற்­றால் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்பு வலு­வ­டை­யும்.

ஜெர்­மனி வெற்றி பெற்­றால் மட்­டும் போதாது. ஸ்பெ­யி­னுக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தின் முடி­வை­யும் கருத்­தில் கொள்ள வேண்­டும்.

தற்­போது ஸ்பெ­யின் ஒரு வெற்றி, ஒரு சம­நி­லை­யு­டன் நான்கு புள்­ளி­க­ளு­டன் 'இ' பிரி­வில் முன்­னிலை வகிக்­கிறது.

குறைந்­த­பட்­சம் இன்னும் ஒரு புள்ளி பெற்­றால் போதும், அது அடுத்து சுற்­றுக்­குள் நுழைந்­து

­வி­டும். வெற்றி பெற்­றால் ஏழு புள்­ளி­க­ளு­டன் 'இ' பிரி­வின் முத­லி­டத்­தைப் பிடித்­து­வி­டும்.

ஆனால் ஜப்­பா­னி­டம் அது தோற்று, கோஸ்டா ரிக்­கா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் ஜெர்­மனி வென்­றால் இரு குழுக்­க­ளுக்­கும் தலா நான்கு புள்­ளி­கள் இருக்­கும்.

அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டால் கோல் வித்­தி­யா­சம் கணக்­கில் கொள்­ளப்­படும். கூடு­தல் கோல் போட்ட குழு அடுத்த சுற்­றுக்­குச் செல்­லும்.

தற்­போ­தைய நிலை­யின்­படி முதல் ஆட்­டத்­தில் ஏழு கோல்­கள் போட்ட ஸ்பெ­யி­னுக்கு நிலைமை சாத­க­மாக உள்­ளது.

மறு­மு­னை­யில் ஜப்­பான் மூன்று புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது. ஜெர்­

ம­னி­யைத் தோற்­க­டித்து காற்­பந்து உலகை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது போல இன்று ஸ்பெ­யி­னை­யும் அது வீழ்த்­தி­னால் மொத்­தம் ஆறு

புள்­ளி­க­ளு­டன் அது அடுத்த சுற்­றுக்­குத் தகுதி பெறும்.

ஜப்­பான் சம­நிலை கண்டு ஜெர்­மனி வெற்றி பெற்­றால் இரு குழுக்

­க­ளுக்­கும் தலா நான்கு புள்­ளி­கள் கிடைக்­கும். அப்­போது கோல் வித்­தி­யாச அடிப்­ப­டை­யில் அடுத்த சுற்­றுக்­குச் செல்­லும் குழு நிர்­ண­யிக்­கப்­படும். ஆனால் ஜப்­பான் இன்று தோற்று, கோஸ்டா ரிக்­காவை ஜெர்­மனி வீழ்த்­தி­னால் 'இ' பிரி­வின் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்து ஜெர்­மனி அடுத்த சுற்­றுக்­குத் தகுதி பெறும்.

இந்நிலையில், கோஸ்டா ரிக்­கா­வை­யும் குறை­வாக எடை­போட்­டு­விட முடி­யாது. முதல் ஆட்­டத்­தில் அது ஸ்பெ­யி­னி­டம் 7-0 எனும் கோல் கணக்­கில் படு­தோல்வி அடைந்­த­போ­தி­லும் அடுத்த ஆட்­டத்­தில் மீண்­டு­வந்து ஜப்­பானை 1-0 எனும் கோல் கணக்­கில் தோற்­க­டித்­தது. தற்­போது மூன்று புள்­ளி­க­ளைப் பெற்­றுள்ள கோஸ்டா ரிக்­கா­வுக்­கும் அடுத்த சுற்­றுக்­குள் நுழை­யும் வாய்ப்பு உள்­ளது.

இன்­றைய ஆட்­டத்­தில் அது ஜெர்­ம­னி­யைத் தோற்­க­டித்து ஜப்­பானை ஸ்பெ­யின் வீழ்த்­தி­னால் காலி­று­திக்கு முந்­திய சுற்­றில் கோஸ்டா ரிக்கா கள­மி­றங்­கும்.

இதற்­கி­டையே, 'எஃப்' பிரி­வி­லும் கடு­மை­யான போட்டி நில­வு­கிறது. இன்­றி­ரவு 11 மணிக்கு குரோ­வே­ஷி­யா­வும் பெல்­ஜி­ய­மும்

பொரு­துகின்­றன.

மற்றோர் ஆட்­டத்­தில் கன­டா­

வு­டன் மொரோக்கோ மோது­கிறது. அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்பு குரோ­வே­ஷியா, பெல்­ஜி­யம், மொரோக்கோ ஆகிய மூன்று குழுக்­க­ளுக்­கும் உள்­ளது.

கனடா இரண்டு ஆட்­டங்­களில் தோல்­வி­யைத் தழுவி அந்த வாய்ப்பை இழந்­து­விட்­டது.

இந்­நி­லை­யில், கன­டாவை எளி­தில் வென்று மொரோக்கோ அடுத்த சுற்­றுக்­குத் தகுதி பெறும் என்று பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கிறது.

எனவே, குரோ­வே­ஷி­யா­வுக்­கும் பெல்­ஜி­யத்­துக்­கும் இடையே கடு­மை­யான போட்டி நில­வும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சம­நிலை கண்­டால் போதும், குரோ­வே­ஷியா அடுத்த சுற்­றுக்­குத் தகுதி பெற்­று­வி­டும்.

எனவே, இன்­றைய ஆட்­டத்­தில் பெல்­ஜி­யம் கோல் வேட்­டை­யில் இறங்­கும் என்­ப­தில் கடு­க­ள­வும் சந்­தே­க­மில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!