தோஹா: உலகக் கிண்ணப் போட்டி யை ஏற்று நடத்தும் கத்தாரை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்
கடித்து அடுத்த சுற்றுக்கு முன்
னேறியுள்ளது நெதர்லாந்து. இந்த ஆட்டத்துடன் கத்தார் போட்டியி
லிருந்து வெளியேறியுள்ளது.
நெதர்லாந்து அடுத்ததாக நாளை மறுநாள் அமெரிக்காவுடன் மோதுகிறது.
இதற்கிடையே, எக்வடோரை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய செனகல், இம்மாதம் 5ஆம் தேதியன்று இங்கிலாந்துடன் மோதுகிறது. எக்வடோர் போட்டியிலிருந்து வெளியேறியது.

