மீண்டும் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து; கிண்ணம் ஏந்தும் நம்பிக்கை வலுவடைந்துள்ளது

மீண்டும் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து; கிண்ணம் ஏந்தும் நம்பிக்கை வலுவடைந்துள்ளது

1 mins read
d87551ed-e164-451e-b1d6-e3a76b0edd32
வேல்ஸ் குழுவுக்கு எதிராக கோல் போட்டு சக வீரர்களுடன் துள்ளிக் குதித்துக் கொண்டாடிய இங்கிலாந்தின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் (வலது).படம்: இபிஏ -

தோஹா: உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யின் காலி­று­திக்கு முந்­திய சுற்­றுக்கு இங்­கி­லாந்து தகுதி பெற்­றுள்­ளது.

முதல் சுற்­றில் இங்­கி­லாந்து மொத்­தம் பத்து கோல்­க­ளைப் போட்டு அனை­வ­ரை­யும் பிரம்­மிப்­பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

முதல் ஆட்­டத்­தில் ஈரானை 7-2 எனும் கோல் கணக்­கில் பந்­தாடி, இரண்­டா­வது ஆட்­டத்­தில் அமெ­ரிக்­கா­வு­டன் சம­நிலை கண்டு, பிறகு வேல்ஸ் குழு­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் 3-0 எனும் கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது இங்­கி­லாந்து. வேல்ஸ் குழு­வுக்கு எதி­ராக மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட் இரண்டு கோல்­களும் ஃபில் ஃபொடென் ஒரு கோலும் போட்­ட­னர்.

இதுவே ஃபொடெனின் முதல் உல­கக் கிண்ண கோலா­கும்.

முதல் சுற்­றில் பல கோல்­கள் போட்டு முத்­திரை பதித்­துள்ள இங்­கி­லாந்து அணி­யால் இம்­முறை இறுதி ஆட்­டம் வரை சென்று கிண்­ணம் ஏந்த முடி­யும் என்று அதன் நிர்­வாகி கெரத் சவுத்­கேட் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார். ஆனால் அதற்குத் தடைக்கல்லாக செனகல் இருக்கிறது. இம்மாதம் 5ஆம் தேதியன்று செனகலுடன் இங்கிலாந்து மோதுகிறது.

வெற்றி பெறும் குழு காலிறுதிக்குத் தகுதி பெறும். செனகலை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. உலகக் கிண்ணப் போட்டியில் செனகலுக்கு எதிராக இங்கிலாந்து களமிறங்கியதில்லை. கவனம் சிதறினால் எதிரணியைப் புரட்டிப்போடும் ஆற்றல் செனகலுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.