தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலந்தை வீழ்த்திய எம்பாப்பே, ஜிரூ

1 mins read
32173903-b650-4c02-ae0d-bf504165f535
-

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் 3-1 எனும் கோல் கணக்­கில் போலந்தை வென்று காலிறுதிச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது பிரான்ஸ்.

பிரான்­சின் முதல் கோலைப் போட்­ட­வர் ஒலி­வி­யேர் ஜிரூ. அதன் மூலம் காற்­பந்து வர­லாற்­றில் பிரான்­சுக்கு ஆக அதி­க­ கோல்­க­ளைப் போட்­ட­ வீரர் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்ளார் ஜிரூ.

பிரான்­சின் இதர இரண்டு கோல்­க­ளைப் போட்­டார் பிஎஸ்ஜி நட்சத்திரம் கிலி­யோன் எம்­பாப்பே. கடைசி சில நிமிடங்­களில் பெனால்டி வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி போலந்­தின் ஒரே கோலைப் போட்­டார் பார்சிலோனாவின் ராபர்ட் லெவண்­டாவ்ஸ்கி.

இந்த உல­கக் கிண்­ணப் போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்பு பிரான்ஸ் அணி­யில் விரி­சல் உள்­ளது போன்ற பல சர்ச்­சை­கள் எழுந்­தன. அவற்­றைப் பின்­னுக்­குத் தள்ளி குழு­வாக அபா­ர­மாக விளை­யாடி வந்­துள்­ளது பிரான்ஸ்.

இந்­தத் தோல்­விக்­குப் பிறகு போலந்து அணி­யில் விளை­யா­டு­வ­தி­லி­ருந்து 34 வயது லெவண்­டாவ்ஸ்கி ஓய்வு­பெ­றக்­கூ­டும் என்று கூறப்பட்டு வரு­கிறது.

அது குறித்து அவர் கருத்து ஏதும் தெரி­விக்­க­வில்லை.