தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரேசிலுக்குப் புதிய சவால்

2 mins read
95fdf6ef-485d-45c8-aab4-46df817f5515
-
multi-img1 of 2

தோஹா: கவர்ச்­சி­யான விளை­யாட்­டால் இந்த உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் அணி­க­ளைப் பந்­தா­டி­யுள்­ளது பிரே­சில். எனி­னும், இப்­போட்­டி­யில் அணி இது­வரை சந்­திக்­காத சவாலை குரோ­வே­ஷியா அளிக்­கக்­கூ­டும். குரோ­வே­ஷிய அணி­யில் பல அனு­ப­வம் வாய்ந்த நட்­சத்­தி­ரங்­கள் இருப்­பது அதற்­குக் கார­ணம்.

அதோடு, கடை­சி­யாக 2002ஆம் ஆண்­டில் உல­கக் கிண்­ணத்தை வென்ற பிறகு ஒவ்­வொரு முறை­யும் பிரே­சில் ஐரோப்­பிய அணி­யால்­தான் வெளி­யேற்­றப்­பட்­டது.

உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் காலி­று­திச் சுற்­றில் இன்று இவ்­விரு அணி­களும் மோது­கின்­றன. ஜப்­பான், பெல்­ஜி­யம் உள்­ளிட்ட அணி­க­ளுக்கு எதி­ராக குரோ­வே­ஷியா சிர­மப்­பட்­டது. ஆனால், தோல்­வி­ய­டை­யா­மல் பார்த்­துக்­கொண்­டது. அந்த அம்­சம் பிரே­சி­லுக்கு சவா­லாக அமை­ய­லாம்.

அதே­வேளை, பிரே­சி­லின் அபா­ர­மான விளை­யாட்டை தடுப்­பது சாத்­தி­யமா என்ற கேள்­வி­யும் எழும்.

இப்­போட்­டி­யில் பிரே­சி­லுக்கு மிகச் சிறப்­பாக விளை­யா­டி­யுள்ள வீரர்­களில் இரு­வர் வினி­சி­யஸ் ஜூனி­யர், ரிச்­சார்­லி­சன். இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ருக்கு அதி­கம் விளை­யா­டாத ரிச்­சார்­லி­சன் உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் அசத்­து­கி­றார்.

பிரே­சி­லின் ஆட்­டங்­களில் பார்ப்­போர் அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்க்­கும் வண்­ணம் விளை­யாடி வந்­துள்­ளார் வினி­சி­யஸ்.

22 வயது வினி­சி­யஸ் ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட் குழு­வில் விளை­யா­டு­கி­றார். உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் தான் இவ்­வ­ளவு சிறப்­பாக ஆடு­வ­தற்கு முக்­கி­யக் கார­ணம் ரியா­லின் பயிற்­று­விப்­பா­ளர் கார்லோ அன்­ச­லொட்டி என்று அவர் குறிப்­பிட்­டார்.

"அன்­ச­லொட்­டி­யி­டம் நான் பேசி­னேன். அப்­போது பிரே­சி­லின் எல்லா ஆட்­டங்­க­ளி­லும் தொடக்­கத்­தி­லி­ருந்து ஆட நான் என்ன செய்­ய­வேண்­டும் என்­ப­தன் தொடர்­பில் அன்­ச­லொட்டி நிறைய அறி­வுரை வழங்­கி­னார். அவர் எனக்கு தன்­னம்­பிக்கை அளித்­தார்," என்­றார் வினி­சி­யஸ்.

"தேவைப்­ப­டும்­போ­தெல்­லாம் அவர் என்­னி­டம் கண்­டிப்­பாக இருப்­பார். அவர் எனது தந்­தை­யைப் போன்­ற­வர்," என்­றும் வினி­சி­யஸ் கூறி­னார். முன்­ன­தாக ரியா­லில் சிர­மப்­பட்ட வினி­சி­யஸ் அன்­ச­லொட்­டி­யின்­கீழ் சிறந்து விளங்­கு­கி­றார்.

இப்­போட்­டி­யில் வினி­சி­யஸ் இது­வரை ஒரு கோலைப் போட்டு இரண்டு கோல்­களை உரு­வாக்கி உள்­ளார். தென்­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் பிரே­சி­லின் லூக்­கஸ் பக்­கெட்டா போட்ட கோலை உரு­வாக்­கி­ய­வர் வினி­சி­யஸ். அதற்­குத் தேவை­யான வித்­தையை குரோ­வே­ஷிய அணித் தலை­வர் லுக்கா மொட்­ரிச்­சி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­ட­தா­கச் சொன்­னர் வினி­சி­யஸ்.

இரு­வ­ரும் ரியால் மட்­ரிட்­டில் விளை­யா­டு­ப­வர்­கள்.

சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் இறு­தி­யாட்­டம் வரை முன்­னே­றிய குரோ­வே­ஷி­யா­வில் பல வய­தான விளை­யாட்­டா­ளர்­கள் இருக்­கின்­ற­னர். 37 வயது மொட்­ரிச், இவான் பெரி­சிச், ஆண்ட்ரெ கிரா­ம­ரிச் உள்­ளிட்ட சென்ற போட்­டி­யில் பெயர் பதித்த பல வீரர்­கள் இன்­ன­மும் குரோ­வே­ஷி­யா­விற்­குச் சிறப்­பாக விளை­யாடி வரு­கின்­ற­னர். எனி­னும், அணி பிரே­சி­லின் ஆற்­ற­லைக் குறைத்து மதிப்­பி­ட­வில்லை.

"பிரே­சில் இப்­போட்­டி­யில் ஆக வேக­மான, ஆகச் சிறந்த அணி," என்­றார் குரோ­வே­ஷிய பயிற்­று­விப்­பா­ளர் ஸ்லாட்கோ டாலிச். அதே வேளை­யில், குரோ­வே­ஷி­யா­வுக்­கும் ஓர­ளவு வெற்றி வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக நம்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்டார்.