தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிவேக இரட்டை சதம்

2 mins read
e5ea3b5e-d3a1-48a6-987e-4ec72d3a5a67
-

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை

சட்டோகிராம்: ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டில் அதிவேக இரட்டை சதமடித்து, சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை இடம்பெறச் செய்தார் இந்திய இளம் வீரர் இஷான் கிஷன்.

பங்ளாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதத்தை எட்டினார். இதற்குமுன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 138 பந்துகளில் இரட்டை சதம் விளாசியிருந்ததே முன்னைய சாதனை.

131 பந்துகளில் 210 ஓட்டங்களை எடுத்து கிஷன் ஆட்டமிழந்தார். அதில் 24 பவுண்டரிகளும் 10 சிக்சர்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அவர் சதம் கடந்ததும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்­டத்­தில் இந்­திய அணி­யின் முன்­னாள் தலை­வர் விராத் கோஹ்­லி­யும் சத­ம­டித்­தார். அவர் 91 பந்­து­களில் 113 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 44வது சதம்; ஒட்டுமொத்தத்தில் 72வது சதம்.

இதன்­மூ­லம், அனைத்­து­லக கிரிக்­கெட் போட்­டி­களில் அதிக சத­ம­டித்­தோர் பட்­டி­ய­லில் 72 சதங்­களு­டன் கோஹ்லி இரண்­டாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளார்.

சச்­சின் டெண்­டுல்­கர் 100 சதங்­க­ளு­டன் முத­லி­டத்­தி­லும் ரிக்கி பாண்­டிங் 71 சதங்­க­ளு­டன் மூன்­றாம் இடத்­தி­லும் உள்­ள­னர்.

நேற்­றைய போட்­டி­யில் முத­லில் பந்­த­டித்த இந்­திய அணி 50 ஓவர் முடி­வில் எட்டு விக்­கெட் இழப்­பிற்கு 409 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. தமி­ழக வீரர் வாஷிங்­டன் சுந்தர் தன் பங்­கிற்கு 27 பந்­து­களில் 37 ஓட்­டங்­களை எடுத்­தார்.

பெரும் இலக்கை விரட்­டிய பங்­ளா­தேஷ் அணி 34 ஓவர்களில் 182 ஓட்­டங்­களை மட்­டும் எடுத்துத் தோற்­றுப்­போ­னது. ஆயி­னும், முத­லிரு போட்­டி­க­ளி­லும் வென்­றி­ருந்­த­தால் அவ்­வணி 2-1 என்ற கணக்­கில் தொட­ரைக் கைப்­பற்­றி­யது.

அடுத்­த­தாக, இந்­தியா-பங்­ளா­தேஷ் அணி­க­ளுக்கு இடையே இரண்டு போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்­பெ­ற­வுள்­ளது. முதல் போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.