பேங்காக்: தென்கிழக்காசிய துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூர்க் குழு மூன்று தங்கம், ஆறு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் பத்துப் பதக்கங்களை அள்ளியது.
சிங்கப்பூர் வீராங்கனை ஃபெர்னல் டான், தம் சகோதரி அடெல் மற்றும் ஹோ சியூ யீயுடன் இணைந்து பத்து மீட்டர் ஏர் ரைஃபிள் குழுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். சிங்கப்பூர்க் குழு 1,872 புள்ளிகளைப் பெற்றது.
அதனைவிட 0.3 புள்ளி குறைவாகப் பெற்ற வியட்னாம் குழுவிற்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.
பெண்களுக்கான பத்து மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவின் இறுதிச் சுற்றில் வியட்னாம் வீராங்கனையிடம் 17-9 என்ற புள்ளிக் கணக்கில் தங்கத்தை நழுவவிட்டார் ஹோ. அத்துடன், 50 மீட்டர் ரைஃபிள்-3 நிலைகள் போட்டியின் தனிநபர் பிரிவிலும் குழுப் பிரிவிலும் சிங்கப்பூர் பெண்கள் தங்கம் வென்றனர்.