மனதளவில் சீர்குலைந்துபோன நெய்மார்

மனதளவில் சீர்குலைந்துபோன நெய்மார்

1 mins read

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யி­லி­ருந்து பிரே­சில் வெளி­யேற்­றப்­பட்­ட­தைத் தொடர்ந்து மன­த­ள­வில் தான் சீர்­கு­லைந்துபோனதாகத் தெரி­வித்­துள்­ளார் நெய்­மார்.

"மனத்­த­ள­வில் நான் அழிந்­து­விட்­டேன். இதுவே என்னை ஆக அதி­கம் காயப்­ப­டுத்­தி­யுள்ள தோல்வி. ஆட்­டம் முடிந்த பிறகு 10 நிமி­டங்­க­ளுக்கு நான் உணர்­வில்­லாத அதிர்ச்சி நிலைக்­குத் தள்­ளப்­பட்­டேன். அதன் பின்­னர் எனது கண்­க­ளி­லி­ருந்து தாரை தாரை­யாக கண்­ணீர் கொட்­டி­யது. என்­னால் அழு­கையை நிறுத்த முடி­ய­வில்லை," என்­றார் பிரே­சி­லின் தலை­சி­றந்த நட்­சத்­திரங்­களில் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் நெய்­மார்.

குரோ­வே­ஷி­யா­வுக்கு எதி­ரான காலிறு­தி­யாட்­டத்­தில் பெனால்டி வாய்ப்பு­க­ளின் மூலம் தோல்­வி­ய­டைந்­தது பிரே­சில். அதற்கு முன்பு வெற்­றி­யா­ளரை நிர்­ண­யிக்க வழங்­கப்­பட்ட கூடு­தல் நேரத்­தில் அபா­ர­மான கோலைப் போட்­டார் நெய்­மார்.

ஆனால், அந்த கோலைத் தொடர்ந்து கூடு­தல் நேரம் நிறை­வ­டை­வ­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்பு கோல் எண்­ணிக்­கை­யைச் சமப்­ப­டுத்­தி­ய குரோ­வே­ஷியா, பெனால்டி வாய்ப்புகளில் பிரேசிலை வெல்லவும் செய்தது.