'மெஸ்ஸியை மட்டும் கவனிக்கமாட்டோம்'

'மெஸ்ஸியை மட்டும் கவனிக்கமாட்டோம்'

3 mins read
f3ff5d9b-e3dd-4940-be8b-66ffe750eeaf
-

லுசாய்ல்: உல­கக் கிண்­ணத்தை வென்றே தீர­வேண்­டும் என்ற வீம்­பு­டன் இருக்­கும் அர்­ஜென்­டி­னா­வின் லய­னல் மெஸ்­ஸி­யை­யும் அவ­ரின் படை­யை­யும் தடுத்து நிறுத்­தும் பணி­யில் இன்று இறங்­க­வுள்­ளது குரோ­வே­ஷியா.

சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் குரோ­வே­ஷியா இறு­தி­யாட்­டம் வரை சென்­றது எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறாக நிகழ்ந்த ஒன்று. பல வேளை­களில் உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் அவ்­வாறு எதிர்­பார்ப்­பு­களை முறி­ய­டிக்­கும் அணி­கள் அடுத்த போட்­டி­யில் அதி­கம் சோபிக்­கா­மல் இருக்­கும். ஆனால் அதை­யும் பொய்­யாக்­கி­யுள்­ளது குரோ­வே­ஷியா.

அர்­ஜென்­டி­னாவை வென்று தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக இறு­தி­யாட்­டத்­திற்­குச் செல்ல குரோ­வே­ஷியா, லய­னல் மெஸ்­ஸி­யை மட்டும் தடுத்­தால் போதும் என்­பது சில தரப்­பி­ன­ரின் கருத்து.

எனி­னும், மெஸ்­ஸி­யைத் தடுப்­ப­தில் மட்­டும் குரோ­வே­ஷியா கவ­னம் செலுத்­தாது என்று கூறி­யுள்­ளார் அந்த அணி­யின் வீரர் புரூனோ பெட்­கொ­விச். மாறாக மொத்த அர்­ஜென்­டினா அணி­யை­யும் சீராக விளை­யா­டா­மல் இருக்க வைப்­ப­தில்­தான் அக்­கறை காட்­டப்­படும் என்­றார் இவர்.

"ஒரு விளை­யாட்­டா­ள­ரைக் குறி­வைத்து அவ­ரைத் தடுப்­ப­தில் மட்­டும் கவ­னம் செலுத்­தா­மல் அணி­யைச் சமா­ளிக்க முயற்சி செய்­வோம். அர்­ஜென்­டி­னா­வில் மெஸ்ஸி மட்­டும் விளை­யா­ட­வில்லை. அத­னி­டம் பல சிறப்­பான விளை­யாட்­டா­ளர்­கள் இருக்­கின்­ற­னர். மொத்த அர்­ஜென்­டினா அணி­யை­யும் நாங்­கள் தடுக்­க­வேண்­டும்," என்­றார் பெட்­கொ­விச்.

பிரே­சி­லுக்கு எதி­ரான இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் தோல்­வி­யின் விளிம்­பி­லி­ருந்து குரோ­வே­ஷி­யாவை மீட்­டார் பெட்­கொ­விச்.

லுக்கா மொட்­ரிச், இவான் பெரி­சிச் போன்ற சில வய­தான விளை­யாட்­டா­ளர்­கள்­தான் குரோ­வே­ஷி­யா­வின் முக்­கி­ய­மான வீரர்­க­ளாக இருந்து வரு­கின்­ற­னர். இருந்­தா­லும் அணி­யின் விளை­யாட்­டில் உற்­சா­கம் இது­வரை குறைந்­த­தில்லை.

காலி­று­திச் சுற்­றில் இரு அணி­க­ளின் கோல் காப்­பா­ளர்­களும் உல­கின் கவ­னத்தை ஈர்த்­த­னர். பிரே­சி­லுக்கு எதி­ரான காலி­று­தி­யாட்­டத்­தில் வெற்­றி­யா­ளரை நிர்­ண­யிக்க ஆட்­டம் பெனால்­டி­கள் வரை சென்­றது. அதில் பிரே­சில் இரண்டு பெனால்டி வாய்ப்­பு­களை கோலாக்­கத் தவ­றி­யது. அவற்­றில் ஒரு பெனால்­டி­யைத் தடுத்­தார் குரோ­வே­ஷி­யா­வின் கோல் காப்­பா­ளர் டாமி­னிக் லிவாக்­கோ­விச்.

ஜப்­பா­னுக்கு எதி­ரான இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தி­லும் மூன்று பெனால்டி வாய்ப்­பு­க­ளைத் தடுத்த லிவாக்­கோ­விச், இப்­போட்­டி­யின் ஆகச் சிறந்த கோல் காப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­கத் திகழ்­கி­றார்.

நெதர்­லாந்­தும் அர்­ஜென்­டி­னா­வும் மோதிய காலி­று­தி­யாட்­டத்­தில் லிவாக்­கோ­விச்­சுக்­குப் போட்டி தரும் வண்­ணம் விளை­யா­டி­னார் அர்­ஜென்­டி­னா­வின் எமி­லி­யானோ மார்ட்­டி­னெஸ். வெற்­றி­யா­ளரை நிர்­ண­யிக்க அந்த ஆட்­ட­மும் பெனால்­டி­கள் வரை சென்­றது. நெதர்­லாந்­தின் இரு பெனால்­டி­க­ளைத் தடுத்­தார் மார்ட்­டி­னெஸ்.

குரோ­வே­ஷியா, அர்­ஜென்­டினா இரண்­டும் போட்­டி­யில் இவ்­வ­ளவு தூரம் வந்­த­தற்கு இவ்­வி­ரு­வ­ரும் முக்­கி­யக் கார­ணம் என்­றும் சொல்­ல­லாம்.

உல­க­ள­வில் மெஸ்­ஸிக்கு இருக்­கும் அமோக ஆத­ரவு, சொந்த நாட்­டில் ஆடு­வது போன்ற உணர்­வைத் தரும் கத்­தார் சென்­றுள்ள அர்­ஜென்­டினா ரசி­கர்­கள் ஆகிய சவால்­களை எதிர்­நோக்­கு­கிறது, கிழக்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குப் பெருமை தேடித் தந்­துள்ள குரோ­வே­ஷியா.

எனி­னும், கடைசி விநாடி வரை விட்­டுக்­கொ­டுக்­கா­மல் விளை­யா­டும் இந்த அணி­யின் ஆற்­றல் அர்­ஜென்­டி­னா­வுக்கு சவா­லாக அமை­யக்­கூ­டும்.

ஆட்­டத்தை முன்­னிட்டு குரோ­வே­ஷி­யா­வில் இது­வரை எந்த விளை­யாட்­டா­ள­ரும் காய­ம­டை­ய­வில்லை. தப்­பாட்­டம் கார­ண­மாக எந்த வீர­ரும் ஆட்­டத்­தில் விளை­யாட முடி­யா­த­படி நீக்­கப்­ப­ட­வும் இல்லை. இது, குரோ­வே­ஷிய ரசி­கர்­க­ளுக்கு நற்­செய்­தி­யாக அமைந்­துள்­ளது.

இப்­போட்­டி­யில் மொரோக்­கோ­வுக்கு அடுத்­த­ப­டி­யாக நடு­நிலை ரசி­கர்­களை அதி­கம் கவர்ந்­துள்­ளது குரோ­வே­ஷியா.