கோஹ்லி: ரொனால்டோதான் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்

கோஹ்லி: ரொனால்டோதான் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்

1 mins read
c83cbdc9-9866-4e4e-88fa-07b018b728fa
-

தோஹா: தன்­னைப் பொறுத்­த­வரை போர்ச்­சு­க­லின் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­தான் காற்­பந்து வர­லாற்­றில் ஆகச் சிறந்த விளை­யாட்­டா­ளர் என்று கூறி­யுள்­ளார் இந்­திய கிரிக்­கெட் நட்­சத்­தி­ரம் விராத் கோஹ்லி. இன்ஸ்­ட­கி­ராம் சமூக ஊட­கத்­தில் இக்­க­ருத்தை வெளி­யிட்­டார் கோஹ்லி.

இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் காலி­று­திச் சுற்­றில் போர்ச்­சு­கலை வென்று வெளி­யேற்­றி­யது மொரோக்கோ. அந்த ஆட்­டத்­திற்­குக் பிறகு பெரும் வருத்­தத்­திற்கு ஆளான ரொனால்ேடா திடலில் கண்­ணீர் வடித்­தது பல ரசி­கர்­களின் மனத்தை உறுக்­கி­யது.

37 வய­தா­கி­யுள்ள ரொனால்டோ இனி உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் பங்­கேற்­க­மாட்­டார் என்று சொல்­லப்­ப­டு­கிறது. எனி­னும், அது குறித்து அவர் தக­வல் ஏதும் தெரி­விக்­க­வில்லை.

தான் என்­றுமே போர்ச்­சு­கல் தேசிய அணிக்­குக் கட­மைப்­பட்­டுள்­ள­தாக மட்­டும் ரொனால்டோ குறிப்­பிட்­டார்.

"இப்­போ­தைக்கு வேறு ஏதும் சொல்­வதற்கு இல்லை. நன்றி போர்ச்­சு­கல், நன்றி கத்­தார். உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் கனவு நன­வா­ன­கும் சாத்­தி­யம் இருந்­த­வரை அது மிகவும் அழ­கானதாக இருந்­தது. இனி நல்ல ஆலோ­சனை வழங்­கும் பொறுப்­பைக் காலத்­தி­டம் ஒப்­ப­டைக்­க­வேண்­டும், அவ­ர­வர் ஊகங்களுக்கு வழி­வி­ட­லாம்," என்று ஃபேஸ்புக் பதி­வில் கூறி­யி­ருந்­தார் ரொனால்டோ. ஐந்து உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் கோல் போட்ட முதல் வீரர் என்ற பெரு­மை­யைப் பெற்­ற­வர் ரொனால்டோ.