தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெற்றி வாகை சூடும் இங்கிலாந்தின் கனவு கலைந்திருக்கலாம். ஆனால் ஓர் உயிருக்கு வாழ்வு கொடுத்த பாக்கியம் கிடைத்துள்ளது அந்த அணியின் இரு வீரர்களுக்கு.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திரங்கள் கைல் வாக்கர், ஜான் ஸ்டோன்ஸ் ஆகிய இருவரும் கத்தாரின் சாலைகளில் சுற்றித் திரிந்த பூனை ஒன்றைத் தங்களுடன் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர். இப்பூனைக்கு டேவ் என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்டோன்ஸ்.
விலங்கு மருந்தகம் ஒன்றில் டேவ் பரிசோதனைகள் மேற்கொளும். அதற்குப் பிறகு நான்கு மாதங்கள் தனிமையில் இருக்கும். அதன் பின்னர் தத்துப் பெற்றோரான சிட்டி வீரர்களிடம் ஒப்படைக்கப்படும்.

