இறுதிச்சுற்றை உறுதிசெய்ய இலக்கு

இறுதிச்சுற்றை உறுதிசெய்ய இலக்கு

3 mins read
82e1e52b-8618-42fc-b630-214fe8e81992
-

தோஹா: நடப்பு உல­கக் கிண்­ணக் காற்­பந்­துத் தொட­ரில் தாக்­கு­த­லில் வலு­வா­ன­தா­கக் கரு­தப்­படும் பிரான்­சும் தற்­காப்­பில் சிறந்து விளங்­கும் மொரோக்­கோ­வும் இன்று பின்­னிரவு நடக்­க­வி­ருக்­கும் இரண்­டா­வது அரை­யி­று­திப் போட்­டி­யில் மோத­ இ­ருக்­கின்­றன.

இத்­தாலி, பிரே­சி­லுக்­குப் பிறகு தொடர்ந்து இரண்­டா­வது முறை­யா­கக் கிண்­ணம் வெல்­லும் அணி எனும் சாத­னை­யைப் படைக்­கும் வேட்­கை­யு­டன் உள்­ளது பிரான்ஸ்.

எவ­ரும் எதிர்­பா­ராவண்ணம் அரை­யி­று­திக்குள் நுழைந்துள்ள மொரோக்கோதான் உல­கக் கிண்­ண அரை­யி­று­திக்­குத் தகு­தி­பெற்ற முதல் ஆப்­பி­ரிக்க அணி.

இந்­நி­லை­யில், அப்­பெ­ருமை மட்­டுமே தங்­க­ளுக்கு மன­நி­றைவு தந்து­வி­டாது, இறு­திச் சுற்றே தங்­க­ளது இலக்கு என்று கூறி­யுள்­ளார் மொரோக்கோ பயிற்­று­விப்­பா­ளர் வலீத் ரெக்­ரகி.

"உல­கின் சிறந்த அணியை நாங்­கள் எதிர்த்­தா­ட­வி­ருக்­கி­றோம். ஆனா­லும், அடைய வேண்­டு­வது என்ன என்­ப­தில் நாங்­கள் கவ­ன­மாக இருக்­கி­றோம். பேரார்­வ­மும் பெரு­வி­ருப்­ப­மும் மிகுந்த கவ­ன­மும் இருந்­தால் எதை­யும் சாதிக்­க­லாம். எங்­க­ளால் வெல்ல முடி­யும் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்று நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது சொன்­னார் திரு வலீத்.

தற்­காப்­பில் மற்ற அணி­க­ளுக்­குப் பேரச்­சு­றுத்­த­லாக விளங்கி வரும் மொரோக்கோ, இது­வரை ஆடிய ஐந்து போட்­டி­க­ளி­லும் சேர்த்து ஒரே ஒரு கோலை மட்­டுமே விட்­டுக்­கொ­டுத்­துள்­ளது.

அதே வேளை­யில், ஐந்­தில் நான்கு ஆட்­டங்­களில் அவ்­வணி வென்­றுள்­ளது.

குரோ­வே­ஷியா, பெல்­ஜி­யம், கனடா ஆகிய அணி­க­ளு­டன் 'எஃப்' பிரி­வில் இடம்­பெற்­றி­ருந்த மொரோக்கோ, ஏழு புள்­ளி­க­ளு­டன் அப்­பி­ரி­வில் முத­லி­டம் பிடித்­தது.

அத்­து­டன், இரண்­டாம் சுற்­றில் ஸ்பெ­யி­னை­யும் காலி­று­தி­யில் போர்ச்­சு­க­லை­யும் தோற்­க­டித்து, உல­கக் காற்­பந்து ரசி­கர்­களை வியப்­பில் ஆழ்த்­தி­யது.

இப்­படி வலு­வான அணி­களை எல்­லாம் வீழ்த்­தி­யுள்ள மொரோக்கோ அணியை குறைத்து மதிப்­பிட்டு, அரை­யி­று­தி­யில் மெத்­த­ன­மாக இருந்­து­வி­ட­லா­காது என்று தம் அணி­யி­னரை எச்­ச­ரித்­துள்ளார் பிரான்ஸ் அணி­யின் துணைத் தலை­வர் ரஃபாயல் வரான்.

"மொரோக்கோ வீரர்­கள் நல்ல உடல்­த­கு­தி­யு­டன் இருப்­ப­தால், எதிர்த்­தாக்­கு­த­லில் அவர்­கள் அபா­ய­க­ர­மா­ன­வர்­க­ளா­கத் திக­ழ­லாம்," என்­றார் வரான்.

இத­னி­டையே, தமது அணி இறுதிச் சுற்­றுக்கு முன்­னே­று­வதை மொரோக்கோ அணி தடுக்க விரும்­பாது என்று நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார் பிரான்ஸ் அணி­யின் தலை­வர் யூகோ லோரிஸ்.

"இறு­திக்­குத் தகு­தி­பெற இரு அணி­க­ளுக்கு இது அரிய வாய்ப்பு. மொரோக்­கோ­விற்கு ஏற்­கெ­னவே இந்த உல­கக் கிண்­ணம் வெற்­றி­க­ர­மா­ன­தாக அமைந்­து­விட்­டது. ஆனா­லும், அவர்­கள் எங்­க­ளைத் தடுக்க விரும்ப மாட்­டார்­கள் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் லோரிஸ்.

நான்கு ஆண்­டு­க­ளுக்­கு­முன் தங்­க­ளது பாணி­யில் ஆடி கிண்­ணம் வென்­ற­தா­கக் குறிப்­பிட்ட பிரான்ஸ் அணி­யின் பயிற்­று­விப்­பா­ளர் டிடியே டெஷோம், தங்­க­ளால் வேறு பாணி­க­ளிலும் ஆட­மு­டி­யும் என்று சொன்னார்.

"எதி­ர­ணி­யி­ன­ருக்கு ஏற்ப ஆட்ட முறையை மாற்­றி­ய­மைத்­துக்­கொள்ள வேண்­டும். அதே­போல, சக வீரர்­களின் ஆட்ட பாணி­யை­யும் கருத்­தில்­கொள்ள வேண்­டும்," என்­றார் அவர்.

எம்­பாப்பே, ஜிரூ, கிரீஸ்­மன், டெம்­பெலே எனச் சிறந்த தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­களை பிரான்ஸ் கொண்­டுள்­ளது. அதிக கோல் அடித்தோர் வரிசையில் எம்பாப்பேவும் (5) ஜிரூவும் (4) முதலிரு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது (இன்று அதிகாலை நடந்த முதல் அரை இறுதிக்கு முந்திய நிலவரம்).

எனி­னும், மத்­தி­யத் திடல் ஆட்­டக்­கா­ரர்­க­ளான சுவா­மெ­னி­யும் ரபி­யோட்­டும் அவ்­வப்­போது கட்­டுப்­பாட்டை இழந்­து­வி­டு­வது பல­வீ­ன­மாக அமை­யக்­கூ­டும்.

அதே­போல, தற்­காப்­பில் தகர்க்க முடி­யாத அணி­யாக விளங்­கி­னா­லும் கோல் போட மொரோக்கோ அணி தடு­மா­ற­லாம். எதிர்த்­தாக்­கு­த­லையே பெரி­தும் நம்­பி­யுள்ள அவ்­வணி, கடந்த போட்­டி­களில் கோல் வாய்ப்­பு­களை உரு­வாக்­கச் சிர­மப்­பட்­டது.

இத­னி­டையே, இறு­திக்கு முன்­னே­றிய முதல் அணி அர்­ஜென்­டி­னாவா குரோ­வே­ஷி­யாவா என்­பது இந்­நே­ரம் தெரிந்­தி­ருக்­கும்.