மொரோக்கோ- பிரான்ஸ்: துளிகள்

மொரோக்கோ- பிரான்ஸ்: துளிகள்

1 mins read

நேருக்கு நேர்

♦ இரு அணிகளும் இதற்கு முன் 11 முறை மோதியுள்ளன. அதில் ஏழுமுறை பிரான்சும் ஒருமுறை மொரோக்கோவும் வென்றுள்ளன; மூன்று ஆட்டங்கள் சமனில் முடிந்தன.

♦ கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன்கண்டது.

♦ இரு அணிகளும் கடைசியாக மோதிய பத்து ஆட்டங்களில் பிரான்ஸ் வெல்ல முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது.

இருவர் சந்தேகம்

இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கோலடித்த பிரெஞ்சு மத்திய திடல் ஆட்டக்காரர் சுவாமெனியும் தற்காப்பு வீரர் யுபாமெகனோவும் நேற்று முன்தினம் நடந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால், மொரோக்கோவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அவ்விருவரும் களமிறக்கப் படுவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் இல்லாதபட்சத்தில் இப்ராகிமா கொனாட்டே, ஜோர்டன் வெரிட்டூ, மேத்தியோ குவெண்டூஸி ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயமடைந்தவர் மீண்டும் வந்தார்

முதலில் அறிவிக்கப்பட்ட மொரோக்கோ அணியில் இடம்பெற்றிருந்தபோதும் உலகக் கிண்ணப் போட்டி தொடங்க ஒரு வாரத்திற்கு முன் காயமடைந்தார் அமீன ஆரித், 25. இந்நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான தன்னாட்டு அணியினருடன் ஆரித் இணைந்துள்ளார். அவரை வரவேற்ற சக வீரர்கள், அவருடன் படம் எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.