மட்ரிட்: பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மாரையும் பிரதிவாதிகள் சிலரையும் மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
2013ல் சாந்தோஸ் குழுவில் இருந்து பார்சிலோனாவுக்கு நெய்மார் மாறியதன் தொடர்பில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
பிரேசிலிய முதலீட்டு நிறுவனமான 'டிஐஎஸ்' இந்த வழக்கைத் தொடுத்திருந்தது.
நெய்மாருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் மற்றவர்களுக்கு 149 மில்லியன் யூரோவும் (S$212.7 மி.) அபராதமும் விதிக்கும்படி டிஐஎஸ் கேட்டுக்கொண்டது.
கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, பார்சிலோனாவில் நெய்மாரின் வழக்கு தொடங்கியது.
இவ்வழக்கில் குற்றம் புரிந்ததற்கு சான்று எதுவும் கிடைக்கவில்லை என்பதால், பிரதிவாதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு பார்சிலோனா நீதிமன்றத்திடம் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் முன்னதாகக் கேட்டுக் கொண்டார்.

